பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 162 இடைவரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது கடைவரும் தீநெறிக் கலியின் ஆட்சியோ?” என்று பரதன் கேட்கிறான், இன்னும், வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார் மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம் காத்தவர் உளர் எனில் காட்டிக் காண் டிரால்” திருமாலின் உந்தியிலே உதித்த பிரமதேவன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை இந்த உலகில் தோன்றினவர் யாரேனும் மூத்தவரிருக்க இளையவராட்சிக்கு வந்தனரென்று கூறியுள்ளதாக நீங்கள் நிரூபித்துக் காட்ட முடியுமா வென்றும் மறுத்துக் கூறி நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க மாட்டேன், எனது மூத்தவனைக் கொண்டு வந்து தொன்ன்மயான நெறி முறைப்படி அவனுக்கே முடி சூட்டி வைப்பேன், என்று கூறித் தனது தம்பி சத்துருக்கனனை அழைத்து இந்த நாட்டின் முறைமைப்படியான மன்னனை அழைத்துவர அனைவரும் வரும்படி நாட்டு மக்களுக்கு அறிவிக்கச் சொல்கிறான். இங்கு பரதன் வலுவாகச் சுட்டிக் காட்டுவது மூத்தவனிருக்க இளையவன் முடி சூடுவது முறையற்றது என்னும் அரச நீதியேயாகும். அதே சமயத்தில் இராமாயணக்கதையில் அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் இளையவர்களே ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் காட்சியைக் காண்கிறோம். கிட்கிந்தையில் மூத்தவன் இருக்கும் போதே தான் இளையவனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து இராமன் வாக்குறுதி அளிக்கிறான். இலங்கையில் மூத்தவன் இருக்கும் போதேதான் விடணனுக்கு இராமன் முடி சூட்டச் செய்கிறான். இது முறையின் பாற்பட்டதன்று என்று கூறப் பட்டாலும் அது அறத்தின் பாற்பட்டதும், அரசியல் தந்திரத்தின் பாற் பட்டதுமாகும். அத்துடன் மூன்று இடங்களிலும் சகோதர உறவு முறையில் பிரச்சனைகளும் ஏற்பட்டன. கிட்கிந்தையிலும், இலங்கையிலும் இளைய சகோதரன் தர்மத்திற்கு விரோமாக மூத்தவனால், அடித்து விரட்டப்படுகிறான். இராமன் இளைவர்களுக்கு அபயம் அளிக்கிறான்.