பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |(уд என்று எண்ணுகிறான். இவர்களையிந்தக் கங்கையைக் கடப்பதற்கே விடமாட்டேன் என்றும் உறுதி கொள்கிறான். இராமனை வனத்திலும் இருக்க விடாமல் விரட்டுவதற்குப் பரதன் படையுடன் வந்துள்ளானென்று கருதியே குகன் இவ்வாறு முதலில் கோபம் கொண்டான். " நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணிரோ”?. என்பது கம்பனின் கவிதை வரிகளாகும். குகன் இராமன்பால் அளவு கடந்த பக்தியும் உயர் மதிப்பும் கொண்டவன் என் ஆருயிர் நாயகன் என்றும் "தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ என்றும் ஆருயிர்த் தோழமை தந்தான்” என்றெல்லாம் பேசுகிறான். "அப்படிப்பட்ட உயர்குண இராமன் என் துணை, அவனுக்கு எனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன். இந்தப் பரதன், இராமனைத் தனது முன்னவன் என்று கூடப் பாராமல் அந்த இராமனுடைய பின்னவன் ஒருவன் நான் இருக்கிறேன் என்பதையும் கூடக் கருதாமல் இப்படிப்படை திரட்டி வந்துள்ளானே இவனை சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் எண்ணுகிறான். “முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர் பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் என்னிதென் என்னை இகழ்ந்தது? இவ் வெல்லை கடந்தன்றோ? மன்னவர் நெஞ்சினில் வேடர்விடும் சரம் வாயாவோ?” என்பது கம்பனுடைய பொருள் பொதிந்த அருமையான கவிதையாகும்.