பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - &'Q) சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன் |07 தம்பியையும் ஒக்கின்றான், தவவேடம் தலைநின்றான் துன்பம் ஒரு முடிவில்லைத் திசை நோக்கித் தொழுகின்றான் எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்”. என்று குகன் கூறுகின்றான். முதலில் குகனிடம் சந்தேகம் எழுந்தது. இப்போது மாற்றம் ஏற்பட்டு இராமபிரானின் சகோதரர்கள் பிழை செய்ய மாட்டார்கள் என்று உறுதி கொள்கிறான் என்பதைக் கம்பன், குகனிடம் படிப்படியாக ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துக் காட்டுகிறார். -இப்போது குகன் தன்னந்தனியாகவே தனது படகை எடுத்துக் கொண்டு எதிர்/கரைக்கு வருகிறான். பரதனைச் சந்திக்கிறான். இருவரும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். வந்த காரணத்தைக் கேட்டான் குகன். “எனது தந்தை எங்களது முன்னோர்களின் முறையிலிருந்து தவறிவிட்டான். அந்தத் தவறை நீக்கி மீண்டும் இராமனை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். என்று பரதன் கூற, அதைக் கேட்ட) குகனுக்கு மனம் நெகிழ்ந்தது. பரதனை மீண்டும் வணங்கி அவரை வாயார மனமாரப் புகழ்ந்து ஆயிரம் இராமர்களும் உனக்கு ஈடாவர்களோ என்றும், உங்கள் மரபினோர் புகழையெல்லாம் உன் புகழ் ஆக்கிக் கொண்டாயென்றும் போற்றிப் புகழ்ந்து பாராட்டுகிறான். அனைவரும் படகில் ஏறித் தென் கரையை அடைகின்றனர். படகில் செல்லும்போது பரதன் தன் தாய்மார்களுக்குக் குகனை அறிமுகப்படுத்துகிறான். இன்துணைவன் இராகவனுக்கு, இலக்குவர்க்கும் இளையவர்க்கும் எனக்கும் மூத்தான், குன்றனைய திருநெடுந்தோள் குகள் என்பான் என்று அறிமுகப்படுத்துகிறான். இராமனுக்கு இணையாகத் தனது மூத்த சகோதரன் என்று குகனை, பரதன் குறிப்பிட்டதும், அதனைத் தொடர்ந்து “ நீவிர் ஐவிரும் ஒரு வீராய் அகலிடத்தை நெடுங்காலம் அளித்தீர்” என்று கோசலை கூறியதையும் ஏற்கனவே பார்த்தோம்.