பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ.-சீனிவாசன் |7| “சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை அன்னது நினைக்கலாகுமோ பூணியல் மொய்ம்பினாய் போந்தது ஈண்னிென்க் காணிய; நீ இது பின்னும் காண்டியால்” என்பது கம்பனுடைய பாடலாகும். தொழுதுயர் கையினன், துவண்ட மேனியன் அழுதழி கண்ணினன், அவலம் ஈதென எழுதிய படிவம் ஒத்து எய்துவானாகத் தனியனாகப் பரதன் இராமனை நோக்கி வருகிறான். "அவலம் ஈதென எழுதிய படிவம் ஒத்து” என்னும் கம்பனது வார்த்தைகள் அவலத்தின் முழு வடிவமாகவே பரதனைக் காட்டியுள்ளது என்பதைச் சிறந்ததொரு இலக்கியப் படைப்பாகக் காண்கிறோம் சீற்றம் கொண்டிருந்த இலக்குவனுக்கு இராமன் பரதனின் தோற்றத்தைக் காட்டுகிறான். அந்தக் காட்சியைக் கண்ட இலக்குவனின் கண்களில் பொங்கிய நீர் மண்ணில் விழுகிறது. பரதன் இருகை கூப்பித் தொழுது கொண்டே இராமனிடம் வந்து "அறம்தனை நினைந்திலை, அருளை நீத்தனை துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான்” இவ்வாறு கூறிக் கொண்டு தன்னை மறந்த நிலையில் ராமனுடைய மலரடியில் வீழ்ந்தான் என்பது கம்பனுடைய வாக்கு. 5)] Լջ. ழந்த து gull "தந்தை இறந்து விட்டார். அவருடைய ஆணையால் இந்த உலகமெல்லாம் உன்னுடையதேயாகும். மகுடம் தாங்கி ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்குப் பதிலாக நீ ஏன் தவ வேடம் கொண்டு இவ்வாறு வந்திருக்கிறாய்?” என்று இராமன் பரதனிடம் கேட்கிறார். அதற்கு பரதன் கொடுத்த பதில் அரிய கருத்துச் செரிவு மிக்க சொற்களாகும். அதில் பரதனுடைய நேர்மையும் சகோதர வாஞ்சையும் வெளிப்படுகின்றன. “நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள்