பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 173 “வரன் நில் உந்தை சொல் மரபினால் உடைத் தரணி நின்ன தென்று இயைந்த தன்மையால் உரனின் நீ பிறந்து உரிமையாதலால் அரசு நின்னதே ஆள்க என்னவே” என்றும் இராமன் வாதிடுகிறான். இங்கு தந்தையும் தாயும் கொடுத்த வரமும் வாக்குறுதியும் மட்டுமல்லாமல், தகுதியும் வலிமையும் படைத்தவனென்றும் பரதன் குறிப்பிடப்படுகிறான். இங்கு “உரனின் நீ பிறந்து உரிமையாதலால்” என்னும் சொற்களில் வலிமையுடைய வலுவான பின்னணியுள்ள தாய் வயிற்றில் பிறந்து/தகுதியும் கொண்டு நீ உரிமை பெற்றிருப்பதால் என்னும் உட்பொருளையும் காண முடிகிறது. "ஆட்சி என்னுடையது தான் என்றால், அதைநான் உனக்குத் தருகிறேன் நீயே வந்து மகுடம் சூடுவாய்” என்று பரதனும் 'அப்படியானால் நான் வனத்தில் உள்ள நாட்களில் என் ஆணைப்படி நீயே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்து” என்று இராமனும் கூற விவாதம் தொடருகிறது. பின்னர் வசிட்டன் தலையிட்டு ஒரு சமரச உடன்பாடு ஏற்படுகிறது. இராமனின் ஆணைப்படி, இராமனுடைய பிரதிநிதியாக பரதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தடஉடன் படுகிறான். இராமனின் திருவடிகளைப் பெற் அவைகளுக்கு முடிசூட்டி இராமனுடைய நீே: ே அரண்மனைக்குப் போகாமல் நந்திக்கிராமத்தில் குடில் அமைத்து அங்கு தங்கி ஆட்சியை நடத்த ஒப்புக் கொள்கிறான். ஈரேழு ஆண்டுகள் முடிந்தவுடன் இராமன் வந்து சேர வேண்டுமென்றும், ஒரு நாள் தாமதமானாலும் தீயில் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் பரதன் கடும் நிபந்தனையுடன் உறுதி கூறி இராமனிடம் விடை பெற்றுக் கொள்கிறான். பரதன் இராமனிடம் விடைபெற்றுக் கொண்ட பின்னரும் இராமனைப் போலவே, தவவேடத்திலேயே தொடர்ந்து இருக்கிறான். அவன் அயோத்தி நகருக்குள் செல்லவில்லை. அரண்மனை வாசம் செய்யவில்லை. நந்திக் கிராமத்தில் குடிசையில் எளிமையான துய துறவி வாழ்க்கையிலிருந்து கொண்டே ஆட்சிப் பொறுப்பை நடத்துகிறான் என்பது பரதன் என்னும் உயர்ந்த உன்னதமான