பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |74 பாத்திரமாகும். பரதனுடைய எளிமை, அவன் ஆட்சி நடத்திய முறை, நமது பாரத பூமியின் ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமானதாகும். இராமன் - பரதன் ஆகிய இருவரின் சகோதர உறவில் ஒரு நுட்பமான கதைப்போக்கு காலத்தினால் நடப்பிலிருந்த ஒரு செய்தி முன்னுக்கு வருகிறது. இந்தச் செய்தி பல களங்களிலும் விவாதிக்கப் படுகிறது. இராமன் முதலில் பிறந்தவன். நால்வரில் மூத்தவன், தந்தையின் ஆழ்ந்த அன்புக்குரியவன். பரதனும் எந்தவிதத்திலும் குறைந்தவனல்லன். வீரம் மிக்கவன். வலிமை மிக்கவன், எல்லாக் கலைகளிலும் வல்லவன், வல்லமை மிக்க அரசியான கைகேயின் மகன். கே.கயநாட்டு அரசனின் மருமகன், தசரதனுடைய தனியன்பிற்கும் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரியவள் கைகேயி. பரதனின் சிறப்பைப் பற்றிக் காவியத்தில் பல இடங்களிலும் பேசப்படுவதைக் காண்கிறோம். நிறை குணத்தவன், குறையில்லாதவன் ஆயிரம் இராமருக்கிணையானவன், செம்மையின் ஆணி, என்றெல்லாம் பரதன் பேசப் படுகிறான். இராமனே 'உரனின் நீ பிறந்து உரிமையானவன்” என்று கூறுகிறான். வரத்தினாலும் தந்தையின் வாக்கினாலும் மட்டுமல்லாமல் வலிமையாலும் தகுதியாலும் பிறப்பாலும் உரிமை கொண்டவன் என்று பேசப் படுகிறான். --- இராமாயணக் கதை முழுவதிலும் இராமனை யாரும் எதிர்த்தும் மறுத்தும் பேசவில்லை. வாலியும் இராவணனும் கூட நேருக்கு நேராக இராமனைப் பழித்தோ குறைத்தோ பேசவில்லை. அருளின் ஆழியானாக முழு முதல் காரணனாகவே காணப்படுகிறான். குகன், இலக்குவன், அனுமன், முதலானோர் இராமனிடம் அளவில்லாத பக்தி கொண்டவர்கள். அவனிடம் எதையும் லேசாக மறுத்தும் கூட பேசமாட்டார்கள். பரதனும் இராமனிடம் அளவில்லாத பக்தியும் பெரு மதிப்பும் கொண்டவன்தான். ஆயினும் இராமனிடம் வாதிடவும் மறுத்துக் கூறவும், அறத்தின் வழியை இராமனுக்கே வலியுறுத்திக் கூறவும் தகுதி படைத்தவனாக இருக்கிறான். பரதன் காட்டில் இராமனை சந்தித்தபோது, அறம் தனை நினைந்திலை,