பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை- சினிவாசன் |75 அருளை நீத்தனை, முறைமையைத் துறந்தனை என்று அந்த இராமனுடைய செய்கையை மறுத்துக் கூறி அறத்தின் வழியை எடுத்துக் கூறி வாதிடுகிறான். கடைசிவரை அவன் தன்னுடைய நிலையை விட்டுக் கொடுக்கவில்லை. இறுதியில் வசிட்டன் தலையிட்டு ஒரு சமரச உடன்பாடுதான் ஏற்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இராமனுடைய வனவாச காலம் முடிந்த போது அயோத்திக்கு அவன் திரும்புவதற்குச் சற்று காலதாமதம் ஆகி விட்டது. தன் வாக்குறுதிப் படி இராமன் வந்து சேரவில்லையென்று பரதன் நந்திக் கிராமத்தில் தீ வளர்த்தான். தீயில் விழச் சென்ற பரதனைத் தடுத்து கோசலை கூறுகிறாள், மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் முன் இழைத்த விதியின் முயற்சியாலாகும். நின் பெருமை ஊழி திரியினும் பேராது, “எண்ணில் கோடி இராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?” என்று மிகவும் உயர்ந்த நிலையில் பரதனை வைத்துக் கோசலை பேசுகிறாள். அந்த நேரத்தில் அனுமன் வந்து இராமன் வருகையை அறிவித்து, வளர்த்த தீயை அணைத்து விடுகிறான். இராமனும் நந்தியம் பதி வந்தடைந்தான். தானும் பரதனும் மற்ற இரு தம்பியரும் மரஉரியும் சடை முடியும் மாற்றி நீராடி ஒப்பனை செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் அயோத்தி போய்ச் சேர்ந்தார்கள். இவ்வாறு நால்வரும் ஒன்றிணைந்தனர். அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச இராமனுக்கு முடி சூட்டப்பட்டது. அயோத்தியின் சகோதரர்கள் நால்வரும் ஒருவரையொருவர்