பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |76 மதித்து மரியாதை கொண்டு, அன்பும் அருளும் பக்தியும் கொண்டு அறம் வழுவாது வாழ்ந்தனர். அறநெறியிலும் ஒழுக்க நெறியிலும் சிறந்து விளங்கினர். அவர்களுடைய மனித வாழ்க்கை சகோதர உறவுக்கும், அன்புக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. பலவேறு சோதனைகள் ஏற்பட்டாலும் இறுதியில் சகோதர ஒற்றுமை நிலை பெறுகிறது. இதில் இராமாயண காவியம் நமக்கு ஆதர்சமாக விளங்குகிறது. அயோத்தியில் பிறந்த நால்வர், விதியின் பிழையால் இருவர் இருவராகப் பிரிந்தனர். இராமனும் இலக்குவனும் இணை பிரியாதிருந்தனர். அதேபோல் பரதனும் சத்துருக்கனனும் இணைபிரியாதிருந்தனர். பரதன் கேகய நாட்டிற்குத் தன்தாய் மாமன் வீட்டிற்குச் சென்றிருந்த போதும் சத்துருக்கனனும் பரதனுடன் சென்றிருந்தான். அதேபோலக் கடைசி வரை இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள். பரத சத்துருக்கனர்களும் இராம இலக்குவர்களின் சாயலாகவே இருந்தார்கள் என்பதையும் அறிகிறோம். இராமனைத் தேடிப் பரதன் காட்டிற்குச் சென்ற போது துரத்தில் நின்ற பரதனையும் சத்துருக்கனனையும் பார்த்தபோது குகன், நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான் என இராம இலக்குவர்களுடன் ஒப்பிட்டுக் கூறுவதைக் காண்கிறோம். சத்துருக்கனன் அமைதியானவன். பரதனை அவன் நிழல் போலத் தொடருகிறான். பக்தியுடன் பரதனுக்குத் துணையாக இருக்கிறான். வனவாசம் முடிந்து இராமன் அயோத்தி வந்து சேரக் காலதாமதமாகி விட்டது. பரதன் சத்துருக்கனனிடத்தில் “சொன்ன நாளில் இராகவன் வந்து சேரவில்லை. நான் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன். நீ ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்” என்று கூறுகிறான். அப்போது சத்தருக்கனன் வருத்த முற்று மிகுந்த கவலையுடன் கூறுகிறான், "கான் ஆள நில மகளைக் கைவிட்டுப் போவானைக் காத்துப் பின்பு