பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zibusir -205 300&wuu umfavor - 9. stofo"*** 177 போனானும் ஒரு தம்பி, போனவன்தான் வரும் அவதி, போயிற்று என்னா ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி, அயலே நாணாது யானாம் இவ்வரசு ஆள் வேன்? என்னே இவ் வரசாட்சி? இனிதே அம்மா !” “மன்னனின் பின் வளநகரம் புக்கிருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் சொல் நிற்கும் என்று அஞ்சிப் புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கினாயே என்னின் பின் இவன் உளனாம் என்றே என் அடிமை உனக்கு இருந்தேனும் உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான்.” இவ்வாறு சத்துருக்கனன் சுருக்கமாகக் கூறுவது மனதை உருக்குவதாக உள்ளது. அவனுடைய தலை சிறந்த சகோதர உணர்வுக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் பக்திக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு அயோத்தியின் சகோதரர்களின் ஒற்றுமைக்கும் சகோதர அன்புக்கும் பாச உணர்வுக்கும் மய்யமாகப் பரதன் இருப்பதைப் பார்த்தோம். அடுத்ததாக இலக்குவனின் கடமையுணர்வைக் காண்போம். இராமனும் இலக் குவனும் இராமனும் பரதனும் போலவே இராமனும் இலக்குவனும் சகோதர உணர்வுக்கும், ஒற்றுமைக்கும், பாசத்திற்கும், பக்திக்கும் தியாகத்திற்கும் பரஸ்பர மதிப்பு மரியாதைக்கும் மற்றொரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள். சகோதர இரட்டையர்களுக்கு இராமனையும் இலக்குவனையுமே முன்னுதாரணமாக நமது நாட்டு மக்கள் கருதுகிறார்கள். இக்காலத்திலும் கூட பாரத நாட்டின் எல்லாப்