பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 178 பகுதிகளிலும் ஒரு தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் ஆண் குழந்தைகளானால் இராமன் இலட்சுமணன் என்றும் பெண் குழந்தைகளானாலும் இராமம்மாள், இலட்சுமணம்மாள் என்றும் பெயர் சூட்டுவது இந்துக்களிடத்தில் பழக்கமாக இருந்து வருகிறது. பரதனுடைய வாய்மை, கடமை உணர்வு, ஆகியவை ஒரு உயர்வான நிலையில் ஒரு உயர்வான நிறையில் காட்டப்பட்டிருக்கிறது. பரதனுடைய தனித்தன்மையும் கதையில் தெளிவாகத் தென்படுகிறது. அதற்கு மாறாக இலக்குவனுடைய சகோதரஉணர்வும் பாசமும், பக்தி நிலையில் இராமனிடமிருந் ன்றைக்கும் பிரியா நிலையில் வைக்கப் பட்டிருக்கிற லக்குவன் எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் மனுடன் பின் தொடர்ந்தே செல்கிறான். வேறு பட்ட, மாறு பிட்டக் கருத்து நிலைகள் ஏற்பட்ட போதும் இராமனுடைய அறிவுரைக்கு அடிபணிந்தும், அண்ணனுடைய ஆணைக்குக் கட்டுப்பட்ட நிலையிலேயே இலக்குவன் பணியாற்றுகிறான். ஆனால் அதே சமயத்தில் அதிகார தோரணயிலோ மேலாண்மை நிலையிலோ அல்லாமல் பரஸ்பரம் தெளிவாகப் புரிந்து கொண்டே செயல்படுகிறார்கள். கருத்துக்களை விவரமாகப் பேசியே கருத்தொற்றுமைக்கு வருகிறார்கள். இது ஒரு மிக உயர்ந்த பண்பாட்டு நிலையாகும். அயோத்தியின் சகோதரர்களான இந்த நால்வரும் குழந்தைப் பருவத்தில் வளரும் போதே கூட இராமனும் இலக்குவனும் சேர்ந்தும், பரதனும் சத்துருக்கனனும் சேர்ந்தும் இணைபிரியாது வளர்ந்தனரென்று கம்பன் மிக நுட்பமாக எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். இராமனும் இலக்குவனும் அதாவது கம்பன் வார்த்தைகளில் ஐயனும் இளவலும் நெய்குழல் உறும் இழையென இணை பிரியாமல் இருந்தனரென்று கம்பன் கூறுகிறார். நெசவு நெய்வதற்கான குழலும் அதில் கோர்க்கப் பட்டுள்ள நூலும் என்று கூறும்படி இணைந்து சுற்றித் திரிந்தார்கள் என்பதாகும். “ஐயனும் இளவலும் அணி நில மகள் தன் செய்தவம் உடமைகள் தெரிதா, நதியும் மைதவழ் பொழில்களும் வாவியும் மருவி நெய்குழல் உறும் இழையென நிலை திரிவர்”