பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் յ:Ջ(Ա, சமுதாயப் பார்வை-அ.-சினிவாசன் 179 என்பது கம்பன் கவிதையாகும். அதே போல பரதனும் சத்துருக்கனனும் இராமனையும் இலக்குவனையும் போல சேர்ந்து இணை பிரியாமல் இருந்தனர் என்றும் கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. “பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது இரதமும் இவளியும் இவரினும் மறை நூல் உரைதரு பொழுதினும் ஒழி கிலர் எனை யாள் வரதனும் இளவலும் என மருகினரே” என்பதும் கம்பன் கவிதையாகும். விசுவாமித்திரன் காட்சி தசரதனிடம் விசுவாமித்திரன் வருகிறான். தனது தவத்திற்குப் பாதுகாப்பாகச் சிறுவர் நால்வரில் கரிய செம்மலைத் தந்திடுமாறு அதாவது நீலநிற முடைய இராமனை அனுப்புமாறு கேட்கிறான். இராமன் மீதிருந்த அளவு கடந்த பாசத்தால் அவன் சிறுவன் நானே வருகிறேன் என்று தசரதன் கூறுகிறான். கோசிகன் கடுங்கோபமடைகிறான். வசிட்டர் அவரை அமைதிப் படுத்தி அரசனுக்கு அறிவுரை கூறி அதன்படி இராமனை அனுப்பlதசரதன் இசைகிறான். இராமன் மட்டுமல்ல, இலக்குவனும் சேர்ந்தே விசுவாமி த்திரனுடன் செல்கின்றனர். நம்பியைத் தம்பி தன்னோடும் நான் மறை முனிவனுக்குக் காட்டி உடன் அனுப்பி வைக்கிறான். அதன் படி தம்பியும் தானும் சேர்ந்து மாதவனை அதாவது தவத்தில் சிறந்த கோசிகனைத் தொடர்ந்து அவன் பின் செல்கின்றனர் என்று கம்பன் கூறுகிறார். “அன்ன தம்பியும் தானும் ஐயன் ஆம் மன்னர் இன்னுயிர் வழிக் கொண்டால் எனச் சொன்ன மாதவன் தொடர்ந்து சாயை போல் பொன்னின் மாநகர்ப் புரிசை நீங்கினான்”