பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 184 எனத் தனது இளவலிடம் இராமன் கூறுகிறான். அந்த நீதியும் இயைந்த நீதியாகும். இந்த நிலத்திற்குப் பொருந்திய நீதியாகும். அந்த நன்னெறியும் இசைவான நீதி வளையாமல் கோணாமல் வரக் கூடிய இந்தப் புண்ணிய பூமிக்குப் பொருந்திய நன்னெறியென்றும் கம்பன் இந்த மண்ணின் மரபாக எடுத்துக் கூறும் சொல்லும் கருத்தும் மிகச் சிறப்பானது. அத்தகைய உனது நிறைவான இசைவான கோணாத நமது நிலத்தின் பண்பாட்டுக்குரிய அறிவில் அறம் வற்றிய முறை தவறிய இந்த மண்ணுக்கு மாறான சீற்றம் எங்ங்ணம் விளைந்தது? என இராமன் கேட்கும் கேள்வி நமது சிந்தனைக்குரியதாகும். இந்தக் கேள்விக்குப் பின்னரும் இலக் து சீற்றம் தணியவில்லை. ஆயினும் இராமன் அவ்வாறு/ கேட்ட போது இலக்குவன் தனது பற்கள் வெளியே தெரியுமளவிற்கு சிரித்துவிட்டுக் கூறுகிறான். நித்திலம் நோக்க நக்கான்” என்பது கம்பன் வாக்கு. முத்துக்கள் போன்ற பற்கள் வெளியே தெரிய நகைத்தான் என்பது அதற்குப் பொருளாகும். இலக்குவனது இந்தச் சிரிப்பு ஒரு தனி ரகமானது. அது புன்சிரிப்புமல்ல, மகிழ்ச்சியான சிரிப்புமல்ல, கோபச்சிரிப்புமல்ல. ஒரு அநியாயம் ஏற்படும் போது அதை எதிர்த்து சீற்றம் கொள்ளாமல் வேறு எப்போது சீற்றம் கொள்வது எனக்கேட்டு” இலக்குவன் பலமாகச் சிரித்தான் என்பதாகும். அதை, “நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்குச் சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்பப் பூண்டாய், பகையால் இழந்தேவனம் போதி என்றால் யாண்டோ அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது ”? என்றான். என்று கம்பன் குறிப்பிடுகிறார். இந்தக் கோபம் இப்போது வராமல் பின் எப்போது வருவது என்று இலக்குவன் பதில் கேள்வி போடுகிறான். மேலும் உன்மீது