பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணத்தை வழங்கி வந்தனர் என்பதும் தெரியலாம். கம்ப நாடருக்கு நெடுங்காலத்திற்கு முன்பே பெருந்தேவனார் பாரதம் போல பெரும் பாலும் வெண்பாயாப்பில் அமைந்த இராமாயண நூல் ஒன்று பெரு வழக்குடையதாயிருந்ததாகும்”என்று பேராசிரியர் மு.ராகவையங்கார் அவர்கள் தனது ஆராய்ச்சித் தொகுதி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஆராய்ச்சித் தொகுதி - பேராசிரியர் மு.இராகவையங்கார் - பாரி நிலையம் வெளியீடு பக்கம் - 17)

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளார் இராம இராவணப்போர் பதினெட்டு மாதங்கள் நடை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆய்ச்சியர் குரவையில்

“மூவுலகும் ஈரடியான்முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்பத்தம்பியொடும்கான் போந்து
சோ அரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே”


என்று இளங்கோவடிகளார் சிலப்பதிகாரக் காப்பியத்தில் குறிப்பிடுகிறார்.

"மின்னுடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடிபத்தும் உடன் விழ
தன்னிகரொன்றில்லாச் சிலைகால் வளைத்திட்ட
மின்னும் முடியற்கோர் கோல் கொண்டு வா”


"தென்னிலங்கை மன்னன் சிரந்தோள் துணை செய்து
மின்னிலங்கும் பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற
மின்னலங்காரற்கோர் கோல் கொண்டு வா”

என்றும்

“என்வில்வலி கண்டு போவென்றெதிர் வந்தான்
தன்வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி