பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ.-சீனிவாசன் 187 விதிவலி, ஊழ்வினையென்று வரும்போலெல்லம் இலக்குவன் வேறு பல இடங்களிலும் கூட அதை நமது வலிமையால் வெல்லலாம் என்று விதி வலியை மறுத்துக் கூறும் தன்னம்பிக்கை கொண்டவனாக இலக்குவன் இருக்கிறான். அவனுடைய இந்த உறுதியை இதர இடங்களிலும் நாம் சிறப்பாகக் காணலாம். “உதிக்கும் உலையுள் உறுதியென ஊதை பொங்கக் கொதிக்கும் மனம் எங்ங்னம் ஆற்றுவேன்? கோள் இழைத்தாள் மதிக்கும் மதியாய் முதல் வானவர்க்கும் வலி இதாம் விதிக்கும் விதியாகும் என்வில் தொழில் காண்டி யென்றான்” என்பது கம்பன் கவிதையாகும். இங்கு இலக்குவனுடைய ஆவேசப் பேச்சு போர்க்குணமாக மாறுகிறது. இத்தகைய கடுமையான சுடு சொற்கிளை இலக்குவன் கூறியபோது இராமன் இன்னும் அடக்கமாகவும் உறுதியாகவும், “தம்பி, வாய்க்கு வந்த படியெல்லாம் பேசாதே, வேதங்களைக் கற்றறிந்த நாவால் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறுவது சரியாகாது. நீ கூறும் வார்த்தைகளெல்லாம் நெறியோடு கூடிய சொற்களல்ல, ஒழுக்கமில்லாதவர்கள் கூறும் சொற்களாகும். தாய் தந்தையர் மீது கோபப்படுவதும் சலிப்படைவதும் சுடு சொற்களால் பேசுவதும் எப்படிச் சரியாகும்” என்று மீண்டும் வாதாடி இராமன் அறிவுரை கூறுகிறான். இராமனுடைய வார்த்தைகளில் அழுத்தம் அதிகமாகிறது. அதையும் மறுத்து இலக்குவன் இன்னும் வாதாடுகிறான். “ஆய்தந்து அவன் அவ்வுரை கூறலும் ஐயநின்றன் வாய்தந்தன கூறுதிஇயோ மறை தந்த நாவால் நீ தந்தது அன்றே நெறியோர் கண் நிலாதது ஈன்ற தாய்தந்தை என்றால் அவர்மேல் சலிக்கின்றது என்னோ”