பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் |O2 என்னையும் பிரிந்தனர், இடர்உறாவகை உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்” என்mான். இந்த வார்த்தைகளைக்- கேட்டவுடன் இலக்குவன் திடுக்கிட்டான். பெரும்துன்பத்தால் விம்மி, “நான் என்ன பிழை செய்தேன்” என்று| கண் கலங்கிக் கேட்கிறான். இலக்குவன் கூறுவதைக் கம்பன் காட்டும் காட்சி மிகவும் அருமையான நுட்பமான ஆழ்ந்து) சிந்திக்கத் தக்கக் காட்சியாகும். “நீர் உள. எனின் உள மீனும் நீலமும் பார் உள. எனின் உள யாவும் பார்ப்புறின் நார் உளதனு உளாய்! நானும் சீதையும் ஆர் உளர் எனின் உளோம் அருளுவாய்” என்றான். இதில் சிறந்த உவமைகள் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். நீர் இருந்தால் தானே மீனும், நீலநிறமும் இருக்கும், உலகமும் இருக்கும், அதனால்தான் உயிரினங்களும் இதர பொருள்கள் அனைத்தும் உள்ளன. தனு உள்ளது,அதனால் தான் நாண் உள்ளது. அதுபோல் இராமன் இருப்பதால் தானே இலக்குவனும் சீதையும் இருக்கிறார்கள். இலக்குவனுடைய நேரடியான கேள்வி இராமனிடம் யார் இருப்பதால் நானும் சீதையும் இருக்கிறோம், அருள் கூர்ந்து கூறுவாயாக’ என்பதாகும். அதற்கும் மேலாக வேறு ஒரு கடுமையான சொல்லை இலக்குவன் எடுத்தாள்கிறான். இராமன் பதில் கூற முடியாத படியான வார்த்தைகளாகும் அவைகள். பெண் ஒருத்தி சொன்னாளென்று நிலமகள் நடுங்கும் படியாக உன்னைக் காட்டிற்கு அனுப்பி, அந்த உண்மையான காவலன் பிழைத்திருந்தான். அத்தகைய மன்னன் தசரதனுடைய மகன் தானே நான் என்னும் காரணத்தினாலே இத்தகைய வார்த்தைகளைக் கூறினாயாவென்று இலக்குவன் கண் கலங்கிக் கேட்டான். இதில் ஆழ்ந்த பொருள் அமைந்துள்ள கண்டனமாக அடக்கமான அழுத்தமான சொற்கூறுகள் அமைந்துள்ளதைக் காண்கிறோம். அந்தப் பாவி மகன் என்று என்னை ஒதுக்குகிறாயா என்று கேட்பதைப் போலிருக்கிறது.