பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு_சமுதாயப்-பார்வை- அ. சீனிவாசன் 195 செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் போயினான் அல்லின் நாப்பனே.” என்பது கம்பன் கவிதை. இந்தக் கவிதையின் ஆழ்ந்த பொருள் பொதிந்த கருத்திற்கும் இலக்கியச் சிறப்பிற்கும் கம்பனே ஈடு இணையாகும். ■ சீதையின் கற்புபலம், இராமபிரானின் பெருந்தன்மை, தம்பி இலக்குவன், தனது கருணையுள்ளம் நல்லுணர்வு வாய்மை, வில்பலம் ஆகியவைகளையே துணையாகக் கொண்டு நள்ளிரவில் அயோத்தியை விட்டு அகன்று வனம் புகுந்தான். இங்கு இராமனுடைய பெருந்தன்மை, കന്ദ്രഞഞ്ഞ, நல்லுணர்வு, வாய்மை, வில் (ஆயுத பலம்) சீதையின் கற்பு ஆகியவைகளுக்கீடாக அவனுடைய தம்பி இலக்குவனும் துணையாக விருக்கிறான் என்பது ஒரு நுட்பமான கருத்தாகும். கடைசி வரையிலும் எல்லா இடங்க்ளிலும் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் இராமனுக்குத் துணையாகத் தம்பி இலக்குவன் இணை பிரியாமல் அண்ன்னைக் காத்து நிற்கிறான். இராமன் சீதையைக் கூட கால வசத்தால் சில காலம் பிரிந்திருக்கிறான். தம்பியைப் ரியவேயில்லை. சகோதர ஒற்றுமைக்கும் சேர்ந்து நிற்பதற்கும் தியாகத்திற்கும் பரஸ்பர அன்பிற்கும் இராம இலக்குவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு தலை சிறந்த எடுத்துக் காட்டாகும். இராமன் காட்டிற்குச் சென்று விட்ட செய்தியைக் கேள்விப்பட்ட பின்னர் தசரதன் ஆவி பிரிந்தது. உடலைத் தைலம் தடவிப் பாதுகாத்து, பரதனுக்குத் தகவல் போயிற்று. பரதன் அயோத்திக்குத் திரும்பினான். நடந்தவற்றையெல்லாம் கேள்விப் பட்டான். வருத்தம் கொண்டான், கோபம் அடைந்தான், நிலை குலைந்தான், தன்னையும் தனது தாயையும் கடிந்து கொண்டான், நிந்தித்தான். அரசு பதவியை ஏற்க மறுத்து-அவனும் தவவேடம் கொண்டு சுற்றமுடன் சேனையுடன் இராமனைத் தேடிப் புறப்பட்டான். இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வந்து ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க எண்ணி அவ்விராமன் சென்ற வனத்தை நோக்கி படை பரிவாரங்களுடன் புறப்பட்டான். கங்கைக் கரைக்கு பரதன் வந்தடைந்தபோது அவனைத்