பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 196 தொலைவில் கண்ட குகன் முதலில் சந்தேகம் கொண்டு கோபப் பட்டான். பின்னர் பரதனின் நிலையறிந்து அவன் ஆயிரம் இராமர்களுக்கிணையாவான் என்று தெளிவு கொண்டான். பரதனும் அவனுடைய பரிவாரங்களும் சித் திரக் கூடத்திற்கருகில் நெருங்கிய போது ஏற்கனவே கொதிப் படங்காதிருந்த இலக்குவன் பரதனைத் தொலைவில் கண்ட போது மேலும் கொதிப்படைகிறான். பரதன் பெரும்படையுடன் வந்திருப்பது இராமனுடன் புேர் செய்யவே என்று தவறாகக் கருதி இலக்குவன் சினமடைந்தான். சீற்றம் கொண்டான், இராமனிடம், வந்து பரதன் தன் சேனையுடன் வரும் செய்தியைச் சொல்லி மிகவும் ஆவேசமாகப் பேசுகிறான். இராமனுக்காக இலக்குவன் தனது தந்தையையே நிந்தனை செய்தான். தாய் கைகேயியைத் திட்டினான், பரதனையும் நிந்தனை செய்தான், இப்போது வனத்தில் பரதன் தன்னுடைய படை பரிவாரங்களுடன் வந்த போது அதைப் பார்த்தவுடன் இலக்குவன் முதலில் கோபத்தால் கொதிப்படைந்தான், சீறி எழுந்தான். பரதனையும் அவனுடைய படையையும் கொன்று குவித் வானுலகிற்கு அனுப்புவேன் என்கிறான். உன்னைக் அனுப்பி விட்டு உன்தாய் அழுவதைப் போல பரதனை-வானுலகுக்கு அனுப்பி விட்டு அவனுடைய தாய் கைகேயியை கண்ணிர் விட வைப்பேன் என்றெல்லாம் கடும் சினத்துடன் பேசுகிறான். பரதனின் பண்பட்ட உள்ளத்தைஇலக்குவன் சரியாகப் புரிந்திருக்கவில்லை. இராமன் மீதிருந்த பக்தியின் மிகுதியால் இவ்வாறு பரதனை நிந்தித்துப் பேசினான். இப்போதும் இராமன் இலக்குவனை அமைதிப் படுத்துகிறான். இலக்குவ, ஈழேழு உலகங்களையும் கலக்குவேன் என்று நீ கருதினால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அறிவுக்குரியதான ஒரு பொருளை உனக்குப் புரிய வைக்க விரும்புகிறேன் என்று தொடங்கி நம் குலத்தில் உதித்தவர் யாராவது தருமத்திலிருந்து விலகிச் சென்றிருக்கிறார்களா? இல்லை அப்போது பரதனும் அவ்வாறு தருமத்திலிருந்து விலக மாட்டான். அதை நீ சரியாகப் பரிந்து கொள்ள வேண்டும். பரதன் என்பால் உள்ள அன்பால் சகோதர பாசத்தால் ஆட்சியை என்னிடம் திரும்பவும் ஒப்படைக்கும்