பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 202 "அன்னவன் சிறுவனால் இவ்வாண் தகை அன்னை ஏவத் தன்னுடை உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி நன்னெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் இந்நெடும் சிலை வலானுக்கு ஏவல் செய் அடியேன் யானே.” என்று இலக்குவன் அனுமனிடம் கூறுகிறான். இராமனுக்கு அரசு இல்லையென்றும், அது பரதனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் கேள்விப்பட்ட போது அடங்காத கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் கொண்ட இலக்குவன் இப்போது மிகவும் அமைதியாக மதிநுட்பத்தோடு, சுக்கிரீவனுக்கு நம்பிக்கை யூட்டும் வகையில் இராமனுடைய பெருந்தன்மையை எடுத்துக் கூறும் முறையில் “தன்னுடைய உரிமைச் செல்வம் தம்பிக்குத் தகவின் நல்கி’ என்று இலக்குவன் இப்போது குறிப்பிடுவது அவனுடைய வளர்ச்சியையும், முதிர்ச்சியையும், பக்குவ நிலையையும் எடுத்துக் காட்டுகிறது. அதற்கு இங்கு சகோதர உறவு முறைத் தத்துவம் பின்னணியாகப் பின்னப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு விட்டுத்தான் அனுமன் தனது தலைவனான சுக்கிரீவனிடம் சென்று இராம - இலக்குவச் சகோதரர்களைப் பற்றி ஆழியான் மைந்தர், பேர் அறிவினார், அழகினார், ஊழியார் எளிதில் நிற்கு அரசு தந்து உதவுவார்’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறான். அதைக் கம்பன் தனது கவிதையில் “சூழிமால் யானை யார் தொழுகழல் தயரதன் பாழியால் உலகெலாம் ஒரு வழிப் படரவாழ் ஆழியான் மைந்தர், பேர் அறிவினார், அழகினார் ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார்” என்று குறிப்பிடுகிறார். இங்கு,தயரதன் சிறப்பும் அவனுடைய மைந்தர்களான இராம,