பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 204 என்று கூறுகிறாள். “அரச, ஆயவர்க்கு இன்னுயிர் நட்பமைந்து இராமன் என்பவன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் எனத்துன்னிய அன்பினர் சொல்லினர் ” என்று கூறினாள். அப்போது அதை மறுத்து வாலி தாரையிடம் “நீ இராமனைப் பற்றி அறியாய், பெண் புத்தியால் அறியாமல் பேசுகிறாய். அவர் அறநெறிகளையெல்லாம் நன்கு அறிந்து அதை நடத்திக் காட்டுபவர். இருமையும் நோக்குறும் இயல்பினர். உலகமெல்லாம் தனக்குக் கிடைத்த போது அதைத் தனது சிறிய தாய் சொல்படி அவளுடைய மைந்தனுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்த ஐயன், அவனைப் போற்றாமல் இப்படித் தவறாகப் பேசாதே’ என்றும் “தனக்கும் தனது சகோதரர்களுக்கும் வேறுபாடு காணாதவர் என்றும் தம்பியரை அவன் உயிராகக் கருதுபவன்” என்றும், “எனக்கும் எனது தம்பிக்கும் உள்ள சண்டையில் அவன் எப்படித் தலையிடுவான்'என்றும் “அவன் அருட் கடலாயிற்றே” என்றெல்லாம் இராமனுடைய சகோதரப் பற்றினைப் பற்றி வாலி மிகவும் சிறப்பித்துக் கூறுகிறான். “ஏற்ற பேர் உலகெலாம் எய்தி ஈன்றவள் மாற்றவள் ஏவ மற்றவள் தன் மைந்தனுக்கு ஆற்றரும் உவகையால் அளித்த ஐயனைப் போற்றலை இன்னன புகறற் பாலையோ” என்றும், “தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரில் இலது என எண்ணி ஏய்ந்தவன் எம்பியும் யானும் உற்று உதிர்ந்த போரிடை அம்பிடைத் தொடுக்குமோ? அருளின் ஆழியான்.” என்றும் வாலி தன் வாய் மொழியாக இராமனின் சகோதர பாசப் பெருமையை மிகுந்த நம்பிக்கையுடன் கூறுவதைக் கம்பன் எடுத்துக் காட்டுவது மிகவும் நுட்பமான பொருள் கொண்டதாக அமைந்திருக்கிறது. சுக்கிரீவன் தனது அண்ணனுக்கு எதிராகப் போருக்கு எழுந்த