பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழினும் அமைந்த மற்ற இராமாயணங்களையும் ஆராய்ந்து தழுவிக் கதையமைத்துக் கொண்டவரேயாவர்” என்றும் பேராசிரியர் மு. இராகவையங்கார் தனது மேற்படி ஆராய்ச்சித் தொகுதி என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

எனவே கம்பன் தனது "இராமாவதாரம்” என்னும் மகாகாவியத்தைப் பாடும் போது தன் காலத்திற்கு முந்திய பல வேறு இராம கதைகளையும் ஆதாரமாக எடுத்துதி கொண்டார் என்பது தெளிவாகிறது.

எனவே கம்பர், ஏற்கனவே பாரத நாட்டு மக்களிடத்தில் மிகவும் பிரபலமடைந்திருந்த ஒரு மக்கள் கதையைத் தன் சிறப்பு மிக்க தமிழ்ப்புலமை, செழுமையான கருத்துச் செறிவு மிக்க சொல்லாற்றல், இலக்கிய வளம், கற்பனை வளம், மனித முன்னேற்றத்திற்கான சிறந்த கருத்துக்கள் மூலம் தனித்தன்மையுடன் தனது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற வகையில், இன்னும் தனது காலத்தையும் கடந்து முன்சென்று, நெடிது நோக்குடன் பல அரிய கருத்துக்களையும் இணைத்து மிகவும் பிரபலமாகத் தமிழில் ஒரு உன்னதமான மகாகாவியத்தை மிக அற்புதமாக இயற்றியுள்ளார் என்பது பாரத நாட்டின் தொன்மையான கலாச்சாரச் செழுமையும் சிறப்பும் மிக்க இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

புகழ்மிக்க பிரபலமான உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்திய வரலாற்று நூலாசிரியர்களின் முன் வரிசையில் உள்ள உயர்திரு.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தனது "A History of South India” “தென்னிந்திய வரலாறு” என்னும் நூலில் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார் “A greater poet than Kuthan was Kamban, the celebrated Author of Tamil Ramayanam or Ramavatharam who flourished in the Reign of Kulothunga III. This poem is the greatest epic in Tamil literature and though the another states that he follows in the wake of Valmiki, still his work is no translation or even adoptation of the Sanskrit original. Like the other great poets who have enriched the literatures of different languages of India by their works on the Ramasaga Kamban imports into his narration the colour of his own time and place” (A History of South India - K.A. Nilakanta Sastri M.A. Oxford University Press - page 367). (கூத்தனைக் காட்டிலும் மிகப் பெரிய புலவன் கம்பன்.