பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 206 இராமாயணப் போர், இராம - இராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள் நடந்ததாகச் சிலப்பதிகாரக்காப்பியம் குறிப்பிடுகிறது. இராக்கதர்களுக்கும் வானரப் பெரும் படைக்கும் நடந்த இப்போரில் இலக்குவனுடைய வீரம் மிக்க போரும் போர்ச் சாதனைகளும் பங்கும் மிக அதிகம். முதல் நாள் போர், இராவணனே முன்னின்று நடத்தினான். அப்போரில் முதல் கட்டத்தில் இராவணனுக்கும் இலக்குவனுக்கும் விற்போர் நடை பெற்றது. அதில் இலக்குவன் இராவணனுடைய கைவில்லைத் துணித்தான். அதைக் கண்டு இலங்கை வேந்தனே வியப்படைந்தான். இலக்குவனைப் பாராட்டினான். இதுவரை மானுடர் இருவர் என்று இகழ்ந்து கூறிக் கொண்டிருந்த இராவணன், இலக்குவனுடைய போர் ஆற்றலைப் புகழ்ந்து கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். “நன்று போர்வலி; நன்று போர் ஆள்வலி; வீரம் நன்று, நோக்கமும், நன்று; கைக்கடுமையும் நன்று நன்று கல்வியும்; நன்று நின் திண்மையும் நலனும்; என்று கைம் மறித்து இராவணன் ஒருவன் நீ” என்றான். மேலும் இராவணன், இலக்குவனைப் பார்த்து'நீயும் இராமனுக்கு ஈடானவன்தான் எனது மூத்த மகன் இந்திரசித்தனும் நானும் தவிர உன்னை எதிர்ப்பவர்கள் யாருமில்லை என்று கூறினான். இலக்குவன் இராமனுடன் சேர்ந்து காட்டில் கரதுTடனர்களை வென்றவன் இப்போது இராவணனுடைய வில்லையும் துணித்தான், எனவே, "கானின் அன்று, இகல் கரன் படை படுத்த அக்கரியோன் தானும், இந்திரன் தன்னை ஒர் தனு வலம் தன்னால் வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த யானும் அல்லவர் யார் உனக்கு எதிர்? என்று உரைத்தான்.” என்று இராவணன் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார்.