பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன் 2O7 இலக்குவனை வில்லால் வெல்ல முடியாது என்று அறிந்த இராவணன் ஒரு வேலாயுதத்தை அவன் மார்பில் எறிந்து அவனை வீழ்த்தினான். இலக்குவன் சாய்ந்தான். உடனே மாருதி தலையிட்டு இலக்குவனைத் துக்கிக் கொண்டு சென்று விட்டான். கும்பகருணனை எதிர்த்தும் இலக்குவன் கடும் போர் புரிந்தான். “இராமன் தம்பி நீ, இராவணன் தம்பி நான், இருவரும் போர் செய உள்ளோம்” என்றும் பெய்தவத்தின் ஓர் பெண் கொடி எம்முடன் பிறந்தாள் செய்த குற்றம் ஒன்று இல்லவள், நாசி வெம் சினத்தால் கொய்த கொற்றவ! மற்றவள் கூந்தல் தொட்டு ஈர்த்தகை தவத்திடைக் கிடத்து வென், காக்குதி” என்றான். “எனது தங்கை ஒரு தவறும் செய்யவில்லை. அவளுடைய மூக்கை அறுத்து, அவளுடைய கூந்தலைப் பற்றி இழுத்த உனது கையை அறுக்கிறேன் பார்” என்று கூறிக் கும்பகருணன் கடும் சினத்துடன் இலக்குவனைத் தாக்கினான். இலக்குவனும் “மாற்றங்கள் நும்பால் வில்லினால் சொல்லின் அல்லது வெம்திறல் வெள்கச் சொல்லினால் சொலக் கற்றிலம் யாம்'என்று பதில் கூறிக் கடுமையாக இராவணன் தம்பியை எதிர்த்தான். இருவருக்குமி டையில் கடும் போர் நடந்தது. இலக்குவனைக் காப்பாற்றச் சுக்கிரீவன் தலையிட வேண்டியதாயிற்று. இராவணனுடைய மகன் அதிகாயன் மிகுந்த வல்லமை மிக்கவன். அதிகாயகுரன் என்று பெயர் பெற்றவன். இராவணன், கும்பகருணன், இந்திரசித்தன் ஆகியோருக்கடுத்த படியாக இலங்கையின் மாவீரர்களின் வரிசையில் வருபவன் அதிகாயனாகும். அவ்வதிகாயனுடன் கடும்போர் செய்து இலக்குவன் அவனை வென்று வீழ்த்தினான். இந்திரசித்தன் மிகுந்த ஆவேசத்துடன் போருக்கு எழுந்தான். இலக்குவன் அவனை வீரத்துடன் எதிர்த்தான். கடும்போர் நடந்தது. இந்திர சித்தனுடைய தேரை இலக்குவன் அழித்தான். இந்திர சித்தன் மாயப் போர் நடத்தி அரவக்கணையை ஏவி இலக்குவனைச் சாய்த்தான். அன்றைய போரின் சோர்வை நீக்கி மறுநாள் போருக்கு வர இந்திரசித்தன் நகருக்குள் சென்று விட்டான்.