பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 20R அரவக்கணையால் தாக்குண்டு இலக்குவன் உணர்வின்றி மயக்கிN மடைந்து வீழ்ந்து கிடந்தான். அதைக் கண்டு இராமன் ಘೆ கலக்க மடைந்தான். சகோதர பாசத்தால் அன்பின் மிகுதியால் விம்மினான், தேம்பினான் “என் தம்பியே இறந்து விட்டால் எனக்கு என்ன புகழ் இருக்கிறது. என்னை நம்பி வந்த நண்பர்களின் நிலையென்னவாகும். பழியே என்னைச் சேரும்,” என்றும் இங்கு ஒருவன் தொல்லை செய்து உலகையே வென்று அழிப்பது விதியென்று ஆகிவிட்டால் என்ன ஆவது” என்றெல்லாம் விம்மி விம்மித் துயரமடைந்து வீடணனிடம் முறையிட்டுக் கூறினான். “எம்பிதிே இறக்கும் என்னின், எனக்கு இனி இலங்கை வேந்தன் தம்பியே! புகழ்தான் என்னை? பழியென்னை அறந்தான் என்னை? நம்பியே என்னைச் சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே உம்பரும் உலகத்துள்ள உயிர்களும் உதவி பார்த்தால்” என்றும் “என்று கொண்டியம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஒர் இடுக்கன் செய்ய வென்று இவன் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி, நின்று நின்று, உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கண் உற்றான் தன்துணைத் தம்பி தன் மேல், துணைவர் மேல் தாழ்ந்த அன்பான்” என்று இராமன் வருந்தியதைக் கம்பன் மிகுந்த சோகக் குரலில் குறிப்பிடுகிறார். அப்போது கலுழன் வந்து நாக பாசத்தை நீக்கினான். இலக்குவன் தெளிவு பெற்று எழுந்தான்.