பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை- so சினிவாசன் 204) “இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணையார மார்பின் அணையா விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளிவந்தது என்ன வியவாக் கிளையார்கள் அன்ன துணை யோரை, ஆவி கெழுவா எழுந்து தழுவா முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான்” விழித்தெழுந்த இலக்குவனை இராமன் தழுவிக் கொண்டான். மிக்க மகிழ்ச்சிடைந்தான். கலுழனை வெகுவாகப் பாராட்டினான். மீண்டும் போர் தொடங்கி உக்கிரமடைந்தது. இந்திரசித்தன் முழு தயாரிப்புடன் வந்து இலக்குவன் மீது நான் முகன் படைக்கலத்தை (பிரம்மாஸ்திரத்தை) ஏவினான். அந்தச் சக்தி ஆயுதம் இலக்குவனையும் மற்றவர்களையும் சாய்த்து விட்டது. போர்க்களத்தில் அனைவரும் சாய்ந்து கிடப்பதைக் கண்டு இராமன் பெரிதும் கலங்கினான். “பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான் குருமணித் திருமேனியும் மனம் எனக்குலைந்தான் தருமம் நின்று தன் கண் புடைத்து அலமரச் சாய்ந்தான் உருமினால் இடி உண்டது ஒர் மராமரம் ஒத்தான்” என்று கூறும் அளவிற்கு இராமன் மனம் கலங்கிக் கண்ணிர் பொங்கினான். விண்ணை உற்ற தம்பியைக் கண்டான். மேலும் கண் கலங்கிப் பேசினான். “பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து அயில் கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்