பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 2|() வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தித் துயில் கின்றாயோ? இன்றி இவ்வுறக்கம் துறவாயோ?” “மாண்டாய் நீயோ, யான் ஒரு போதும் உயிர் வாழேன் ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறை யாற்றார், வேண்டா வோ நான் நல்லறம் அஞ்சி மெலிவுற்றால்’ “நான் கானகத்தில் பதினான்கு ஆண்டுகள் இருந்த காலத்திலெல்லாம் வெயில், காற்று, மழை என்று பாராமல் எனக்காக எல்லாத் துன்பங்களையும் தாங்கி நின்று இப்போது மெலிவுற்று உறங்குகிறாயோ? இனி எழ மாட்டாயா? நீ மாண்டாயோ? நான் உயிர் வாழ மாட்டேன். பரதனும் நாட்டை ஆளாமல் உயிர் விடுவான். மற்றவர்களும் நமக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுக்க மாட்டார்கள். தருமத்தைக் காக்க நின்றதால் எனக்கு இத்தனை துன்பங்களும் வர வேண்டாமே'என்றெல்லாம் இராமன் ஒரு சாதாரண மனிதனைப் போல சகோதர பாசத்தால் துன்பமும் துயரமும் அடைந்துக் கண் கலங்கிப் பேசினான். "அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும் எனையலலால துறந்தாய் ! என்றும் என்னை மறாதாய் துணை வந்து பிறந்தாய், என்னைப் பின்பு தொடர்ந்தாய் பிரிவற்றாய் ! இறந்தாய் உன்னைக் கண்டும் இருந்தேன் எளியேன் ஒ!” என்றும்