பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ._சினிவாசன் 2|| “என்று என்று ஏங்கும், விம்மும் உயிர்க்கும் இடை அஃகிச் சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்தப் பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தோடு புல்லி ஒன்றும் பேசான், தன்னை மறந்தான் துயில்வுற்றான்” என்றும், கம்பன் அந்தத் துயரக் காட்சியை விரித்துக் கூறுகிறார். போர் வீரர்களுக்கு உணவு சேகரிக்கச் சென்றிந்ருந்த வீடணன், போர்க்களத்திற்குத் திரும்பிய போது இந்தத் துயரக் காட்சியைக் கண்டான். சாய்ந்து கிடந்தவர்களில் அனுமனைத் தேடி அவனைக் கண்டான். இருவரும் சேர்ந்து சாம்பனைத் தேடிக் கண்டனர். சாம்பன் சஞ்சீவி மலையைக் கொணரும் படியும், அம்மலையிலுள்ள சில அபூர்வமான மூலிகை இலைகளைக் குறிப்பிட்டு, வேகமாகச் சென்று அவைகளை எடுத்து வரும்படியும் அனுமனிடம் கூறினான். “மாண்டாரை உய்விக்கும் மருந்தொன்றும் மெய் வேறு வகிர்களாகக் கீண்டாலும் பொருந்து விக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் மீண்டேயும் தம் முருவே அருளுவதோர் மெய் மருந்தும் உள, நீவி ஆண்டு ஏகிக் கொணர்தி, என அடையாளத் தோடும் உரைத்தான் அறிவின் மிக்கான்” என்று அறிவில் மிக்க சாம்பவன் மருந்துச் செடிகளின் அடையாளங்களைக் கூறி மாருதியை அனுப்பி வைத்தனர். மாருதி வெகு வேகமாக ஆகாய மார்க்கத்தில் பறந்து சென்று சஞ்சீவி மலை இருக்குமிடத்தை அடைந்தான். “இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் சிங்கும் ஆல் காலம்; என்றுணர்ந்த சிந்தையான்