பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 212 அங்கது வேரொடும் அங்கை தாங்கினான் பொங்கு நல்விசும்பிடைக் கடிது போகுவான்” என்னென்ன மருந்துச் செடிகள் இவைகள் என்று தேடிக் கொண்டிருக்க நேரமும், காலமும் இல்லாததால் அனுமன் மலையையே வேரோடு எடுத்துக் கொண்டு வேகமாகத் திரும்பி வந்து சேர்ந்தான் என்று கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். இலையைக் கொண்டு வரச் சொன்னால் மலையைக் கொண்டு வரும் நமது நாட்டு மக்களின் சிறப்பியல்பைக் கம்பன் அனுமன் மூலமாக எடுத்துக் கூறுவதாகக் கொள்ளலாம். போர்க்களத்தில் சோர்ந்து கிடந்த இராமனை வீடணனும் சாம்பவனும் ஆறுதல் கூறித் தேற்றிக் கொண்டிருந்தனர். கண் விழித்த இராமன் மெதுவாகப் பெரும் துயரத்துடன் பலவாறு கூறினான். “மாயை இம்மான் என எம்பி வாய்மையால் துாயன உறுதிகள் சொன்ன சொற்கொளேன் போயினேன் பெண் உரை மறாது போனதால் ஆயது இப்பழியுடை மரணம் அன்பினிர்” ‘தேவர்தம் படைக் கலம் கொடுத்துத் தீயவன் சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் ஆவதை இசைத்திலென், அழிவது என் வயின் மேவுதல் உறுவது ஒர் விதியின் வெம்மையால்” "இளையவன் இறந்த பின் எவரும் என்? எனக்கு அளவறு கீர்த்தி என்? அறம் என்? ஆண்மை என்? கிளையுறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்? விளைவு தான் என்? மறைவிதி என்? மெய்ம்மை என்?” - “தாதையை இழந்த பின் சடாயு இற்ற பின் காதல் இன் துணைவரும் மடியக் காத்து உழல்