பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவன் தமிழில் மிகவும் பிரபலமான புகழ்வாய்ந்த இராமாயணம் அல்லது இராமாவதாரம் என்னும் மகாகாவியத்தை எழுதிய நூலாசிரியர். மூன்றாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் அவர் மிகவும் பிரபலமடைந்து விளங்கியிருந்தார். இந்தக் காவியம் தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறந்த இதிகாச நூலாகும். வால்மீகியின் நூலைப் பின்பற்றி இந்தக் காவியத்தைப் பாடியதாகக் கம்பன் கூறிய போதிலும் அது சமஸ்கிருத மூலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப் பட்டதோ அல்லது தழுவியதோ கூட அல்ல. இராமனின் சிறப்பைக் கூறும் காவியங்களை எழுதிய இதர பெரிய கவிஞர்களும் இந்தியாவின் பலவேறு மொழிகளிலும் அவற்றின் இலக்கியங்களைச் செழுமைப் படுத்தியதைப் போலக் கம்பனும் தனது சொந்த வாழ்விடத்தையும் காலத்தையும் வெளிப்படுத்தும் சாயல்களைக் கொண்ட சிறந்த கருத்துக்கள் நிறைந்த கவிதைகளை முன் வைத்து மிகவும் சிறப்பாகப் பாடியுள்ளார்.

கம்பனுடைய தமிழ்க் கவிதைகள் மூலத்தையும் விஞ்சி மிகச் சிறந்த காவியமாக தமிழ்ப் பேரிலக்கியங்களில் தனிப் பெரும் இலக்கியங்களில் ஒன்றாக வளமான தமிழ்ச் சொற்கள் பெரும் அளவில் நிறைந்ததாக தமிழ் மக்களின் தலை சிறந்த இலக்கியச் செல்வமாகக் கலாச்சாரக் கருவூலமாக உலகப் பேரிலக்கியங்களுக்கு இணையாகத் திகழ்கிறது.

கம்பன் தனது இராமாயணப் பெருங்காவியத்தில் கையாண்டுள்ள தமிழ்ச் சொற்கள் ஏராளம். நமது சொல் வளத்தை பெருக்கிக் கொள்ளக் கம்பனின் கவிதைகள் ஒரு பெரும் களஞ்சியம்.

வடமொழியில் தோன்றிய இராம காவியம் பிற இந்திய மொழிகளுக்குச் சென்ற போது அந்தந்த மொழிகளைக் கொண்ட மக்களின் இயல்புகள், அவர்களின் இலக்கியக் கலாச்சார வளம், பாரம்பரியம், வரலாற்று மரபுகள், பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள், நாகரிக வளர்ச்சி மட்டம், சமுதாய உணர்வு நிலை உயர்வு, தனித்தன்மைகள் முதலியனவும் இணைந்து அம்மொழிகளில் அமைந்துள்ள இராமாயணக் காவியங்களும் இந்திய இலக்கியக் குடும்பத்தின் சாத்திரக் குழுவின் தலை சிறந்த செல்வப் பிரிவுகளாக இடம் பெற்றிருக்கின்றன. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்,