பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зыйцей — всѣ заретили பார்வை-அ. சீனிவாசன் 215 இங்கு சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து Tಥ್ರ மாண்டோர் அனைவரையும் உயிர் பெற்று எழச் செய்த) காட்சி இராமாயண இதிகாசக்கதையில் ஒரு மிக முக்கியமான, மிகப் பிரபலமான, பாரத நாட்டு மக்களிடத்தில் அவர்களுடைய உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றுள்ளதொரு அற்புதமான காட்சியாகும். இதில் அனுமனை இராமன் வாயாற மனமாறப் பராட்டியதைப் போல, பாரத நாட்டு மக்களெல்லாம் கூட அம்மாருதியின் அருஞ்செயலை காலம் தோறும் என்றென்றைக்கும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பவன் வானரத் தலைவர்களில் வயதில் மூத்தவன், அளப்பறிய ஆற்றல் படைத்தவன். அறிவு மிக்கவன். அவன் சஞ்சீவி மலையைப் பற்றியும் அதில் உள்ள உயிர் காக்கும் பலவகை மூலிகைச் செடிகளைப் பற்றியும், இலைகளைப் பற்றியும் நன்கு அறிந்தவன். அவன் இலையைக் கொண்டு வரச் சொன்னான். அனுமன் மலையையே கொண்டு வந்து விட்டான். அந்த மாமாருதி இந்த நாட்டு மக்களின் பூதவடிவம். நடமாடும் உலகப் பெருவடிவம். அவ்வனுமன் அதிகம் பேச மாட்டான். அதனால் சொல்லின் செல்வன் எனப் பெயர் பெற்றவன். அவன் பேராற்றல் மிக்கவன். ஆனால் அடக்கமானவன். அவனுடைய மகா சக்தியைப் பற்றி அவனுடைய மகா பலத்தைப் பற்றி அவனுக்குத் தெரியாது. மற்றவர்கள் அதை எடுத்துக் கூற வேண்டும். அம்மாருதி தான் பாரத மக்கள் மகாசக்தி. இராமன் எங்கிருக்கிறானோ அங்கெல்லாம் அனுமனும் இருப்பான். இராமன் பெயர் உள்ள இடங்களிலெல்லாம் அனுமனும் இருப்பான். இராமன் கதை பேசப்படும் இடங்களிலெல்லாம் அனுமனும் இருப்பான். மாருதியின் உலகப் பெருவடிவம் அவனுடைய அருஞ்செயல்கள், பெரும் சேவை இந்திய மக்களுடைய உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது. பாரத பூமியின் சாதாரண மக்கள், அவர்களுக்கு எதாவது ஒரு கஷ்டம் ஏற்படும் போதெல்லாம் மாருதியை நினைத்துக் கொள்கிறார்கள். அம்மாருதியே சுந்தா காண்டத்தின் தலைவன். இராமாயணப் பெருங்கதையின் அடிநாதம், இந்த மாபெரும் இதிகாசத்தில் ಘೀ தோன்றினானோ அப்போது முதல் தொடர்ச்சியாக அவன் உயிர்த்துடிப்பாக இருந்து அருஞ் செயல்கள் ஆற்றுகிறான். அவனுடைய பெருமை என்றென்றும் வாழ்க. உலக மக்களுடைய உள்ளங்களில் நீங்காத இடம் பெறுக. அவனுடைய ஆற்றலும்,