பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 216 அறிவும், அடக்கமும் செயல் திறனும் இந்த உலக மக்கள் அனைவருக்கும் உறுதுணையாக நீடிக்கட்டும். மாருதியின் பெருமை பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. நான்முகன் படையிலிருந்தும் தப்பி இலக்குவனும் வானரப் படையும் உயிர் பெற்றெழுந்த செய்தியைக் கேட்ட இந்திரசித்தன் அதிகமாக வியப்படைந்தான். மேலும் வலுவான போருக்குத் தயாரானான். நிகும்பலை யாகத்தைச் செய்து முடித்து மனிதர் வானரர் படைகளைத் துடைக்கத் துணிந்தான். அந்த யாகத்தைச் செய்வதை யாரும் அறிந்து விடாத படி வானரர் படையை மறுக்காட்டி திசை திருப்பும் நோக்கத்துடன் மாயா சீதையைக் கொண்டு வந்து தாட்டி_அதைக் கொன்றும் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கப் போவதாக மாற்றுத்திசை) காட்டியும் இந்திரசித்தன் மாயாசாலம், தந்திரசாலம் செய்தான். அயோத்தியை நோக்கி இந்திரசித்தன் செல்கிறான் என்னும் செய்தியைக் கேட்ட இலக்குவன் பரதனைப் புகழ்ந்து கூறுகிறான். “தீக் கொண்ட வஞ்சன் வீசத்திசை முகன் பாசம் தீண்ட விக் கொண்டு வீழயானோ பரதனும்? வெய்ய கூற்றைக் கூக்கொண்டு குத்துண்டு, அன்னான் குலத் தோடும் நிலத்தன் ஆதல் போய்க் கண்டு கோடி, அன்றே! என்றனன் புழுங்குகின்றான்” என்று கூறுகிறான், அதாவது “இந்த இந்திரசித்தன் என்னும் தீயவன் ஒரு வஞ்சகன். திசைமுகன் படையை ஏவி என்னை வீழ்த்தியது போல, பரதனை அவன் ஒன்றும் செய்து விட முடியாது. அவன் அங்கு போனால் நன்றாக அடியும் குத்தும் வாங்கி/குலத்தோடு அழியப் போகிறான். அதை நீங்கள் காணப் போகிறீர்கள்” என்று இலக்குவன் கூறியதைக் கம்பன் இங்கு மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். முன்பு பரதனைப்