பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ыйшей —:ӘСъ әсдалилд итгэта — на збойылғәй. 221 மலர்களைப் போன்று இமயத்தின் உச்சியில் நின்று மணம் பரப்புகின்றன. இராம - இராவணப் போர் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது. இராமனுக்கு ஈடு கொடுத்து இராவணன் எதிர் நிற்கிறான். அச் சமயத்தில், "அக்கணத்தின் அயன் படை ஆண் தகைச் சக்கரப்படை யோடுந்தழி இச்சென்று புக்கது அக்கொடியோன் உரம் பூமியும் திக்கனைத்தும் விசும்பும் திரிந்தவே.” இராமபிரானின் அயன்படையும் சக்கரப் படையும் வெகு வேகமாகச் சென்று இராவணனுடைய உயிரைக் கொண்டு சென்றது. “முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக்கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த புயவலியும் தின்று மார்பில் புக்கோடி உயிர் பருகிப் புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி” என்பது கம்பனுடைய புகழ் மிக்க பாடலாகும். “சோதியான் மகன் சுக்கிரீவன், வாயுவின் மற்றும் ஏதில் வானர வீரர்களுடன் சென்று பிரமதேவன் ஆக்கிய நூல் முறைகளின் வீடணனுக்கு நெடு முடிசூட்டுவாய் என் லக்குவனுக்கு இராமன் ஆணையிட, அவ்விளைய பெருமாள் விடணாழ்வாருக்கு இலங்கை அரசின் பட்டத்தைச் சூட்டினான் என்று கம்பர் அழகாகக் குறிப்பிடுகிறார். ன் அனுமன், ஆதி நாயகனான படி நீதியானான