பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 222 சீதை அக்கினிப் பிரவேசம் செய்து இராமனிடம் சேருகிறாள். தசரதன் தோன்றி அனைவரையும் வாழ்த்தி இலக்குவனைப் புகழ்ந்து “மைந்த! எண்ணின் நீக்கரும் பிறவியும் என் நெஞ்சில் இறந்த புண்ணும் நீக்கினை தமையனைத் தொடர்ந்துடன் போந்தாய்” என்று இலக்குவனுடைய தியாகத்தையும், சகோதர பாசத்தையும் பக்தியையும் பாராட்டிப் புகழ்ந்ததைக் கம்பன் மிகவும் சிறப்பாகத் தனது கவிதையில் குறிப்பிடுகிறார். கிட்கிந்தை சகோதரர்கள் வாலியும், சுக்கிரீவனும் கிட்கிந்தையின் சகோதரர்கள். வாலி மூத்தவன், வல்லமை மிக்கவன், எண்ணற்ற வரங்களைப் பெற்றவன். அவனை யாராவது நேருக்கு நேர் எதிரில் நின்று எதிர்த்தால் எதிர்த்தவர்களின் பலத்தின் பாதி அவனுக்குப் போய்விடும். எனவே வாலியை யாராலும் வெல்ல முடியாது. சுக்கிரீவன் அண்ணன் மீது அன்பும், பாசமும் அச்சமும் மரியாதையும் கொண்டவன். ஆயினும் மூத்தவன் வாலிக்குத் தம்பி மீது தப்பெண்ணம் ஏற்பட்டு விட்டது. முரண்பாடுகள் ஏற்பட்டு விட்டன. சுக்கிரீவனை அண்ணன் அடித்துத் துரத்தி விட்டான். அவன் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே தவித்தான். இராமனுடைய நட்பு கிடைத்து அவனுடைய உதவியால், அவனுடைய பலத்தால் சிறந்த உபாயத்தால் அண்ணனைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிக்கு வந்தான். இக்கதைப் பகுதியில் சகோதர உறவு பற்றிய மிக நுட்பமான நெறி முறைகள் பற்றிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. அதைப் பற்றிக் கம்பன் மிக அருமையாக எடுத்துக் கூறுகிறார். சபரி மூதாட்டியைச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டு அவள் அடையாளம் காட்டிய மலையைத் தேடி இராமனும், இலக்குவனும் வந்து கொண்டிருந்தனர். பம்பைத் தடாகத்தில் நீராடி விட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். சபரி குறித்த மலையை அடைந்தனர். சுக்கிரீவன் அவர்களைத் தொலைவிலிருந்து கண்டான். அவர்களை யார் என்று அறிய விரும்பி அனுமனை அனுப்பினான். மாருதி மாறு வேடத்தில் சென்று இராம இலக்குவர்களைச் சந்தித்தான். இராமன் சுக்கிரீவனைப் பற்றி அனுமனிடம் கேட்டான். அதற்கு அனுமன்,