பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைபா -ஒரு சமுதாயப П "Гтлтан і 7 — so. சினtlவாசன் 223 “இரவிதன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் பரிவிலன் சீறப் போந்து பருவரற்கு ஒருவனாகி அருவி அம்குன்றில் எம்மோடு இருந்தனன் அவன் பால் செல்வம் வருவது ஒர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளிர்.” என்று கூறினான். இரவியின் புதல்வன் சுக்கிரீவனை, இந்திரன் புதல்வனாகிய வாலி, தன் தம்பி மீது அன்பும் பரிவும் இல்லாமல் சீற்றம் கொண்டு தன் வல்லமையால் அடித்துத் துரத்தி விட்டான். அவ்வாறு விரட்டிய காரணத்தால் அவன் துன்பத்துக்காளகி இந்த மலையில் எங்களோடு இருக்கிறான். அவனுக்குத் துணையாகச் செல்வம்தானே தேடி வந்ததைப் போல நீங்கள் வந்துள்ளிர்கள். உங்களை யாரென்று எங்கள் தலைவனிடம் கூறலாம் என்று அனுமன் மிகுந்த அடக்கத்துடன் கூறுகிறான். மூத்தவன் வாலி இந்திரன் மகன், மிகுந்த வல்லமை படைத்தவன், சிவபக்தன், வேதகால இலக்கியங்களில் இந்திரன் முதல் நிலையிலான கடவுளாகப் போற்றப் பட்டான். அக்காலத்தில் இந்திரனுக்கு அதிகமான வழிபாடுகளும் விழாக்களும் நடை பெற்றன. ஆயினும் காலத்தின் வளர்ச்சியில் இந்திர வழிபாடு படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சிவ வழிபாடும், திருமால் வழிபாடும் முதல் நிலைக்கு வந்தது. தற்காலத்தில் இந்திர வழிபாடு அதிகம் இல்லை. அநேகமாக இல்லையென்றே கூறலாம். அதற்கென தனியான கோயில்களும் இல்லை. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் இதிகாசங்களிலும் திருமால் அவதாரங்களும், அதன் பெருமைகளும் சிறப்புகளும் முதல் நிலைக்கு வந்துள்ளன. இந்திரன் இரண்டாம் நிலைக்கும் இன்னும் கீழ்நிலைக்கும் கூட பின்னுக்குத்-தள்ளிட் பட்டிருப்பதைக் காண முடிகிறது. இராவணனுடைய/மேகநாதனே கூட இந்திரனைவென்று இந்திரசித்தன் எனப் பெய்ர் பெற்றான்.