பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 224 மேலும் இந்த இதிகாசங்களில் சிவசக்திக்கு/திருமால் பெருமை மேற்பட்டதாகவும், காட்டப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இங்கு இரவியின் புதல்வன் சுக்கிரீவனும் இந்திரன் மகன் வாலியும் சகோதரர்களாக வருகிறார்கள். மூத்தவனான வாலி, இளையவனான சுக்கிரீவன் மீது சீற்றம் கொண்டு அவனை அடித்துத் துன்புறுத்தித் துரத்திவிட்டான் என்று அனுமன் கூறியதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அனுமன் மிகவும் அடக்கமானவன், அதிகம் பேசமாட்டான். ஆயினும் பேராற்றலும் செயல் திறனும் மிக்கவன். இராம இலக்குவர்களை யார் என்று தெரிந்து கொள்வதற்காக நேரடியாக நீங்கள் யார் என்று அனுமன் கேட்கவில்லை. "யார் என விளம்பு கேன்யான் எம் குலத்தலைவற்கு உம்மை’ என்று மிக நயமாக அடக்கமாகக் கேட்கிறான். இலக்குவன் விவரமாகத் தங்களைப் யார் என்றும் இதுவரை நடந்துள்ள அவர்களுடைய கதையைத் தொடக்கத்திலிருந்து அங்கு வந்துள்ளது வரை விரிவாக எடுத்துக் கூறினான். அதன்பின் அனுமன் சுக்கிரீவனிடம் திரும்பிச் சென்று இராம இலக்குவர்களைப் பற்றி கூறுகிறான்."அளவில்லாத வல்லமை கொண்டுள்ள வாலிக்குக் காலனாக வந்துள்ளனர். நாம் நமது துயரக் கடலைக் கடந்து விடலாம். அவர்கள் உனக்கு அரசு தந்து உதவுவார்கள்” என்றும் கூறி ஆனந்தக் கூத்து ஆடினான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். சுக்கிரீவனும் இராமனும் சந்திக்கிறார்கள். இருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சுக்கிரீவன் தனக்கு முன்னவன் தன்னை அடித்துத் துரத்தியது பற்றியும் உலகத்தில் எங்கு சென்றாலும் துரத்தித் துரத்தி அடித்தது பற்றியும் கடைசியில் அந்த வாலிக்கு ஏற்பட்டிருந்த ஒரு சாபத்தால் இந்த மலைக்கு வர முடியாமல் இருந்ததால் இங்கு தாங்கள் வந்து ஒளிந்து கொண்டது பற்றியும் இராமனிடம் கூறுகிறான். இராமனும் சுக்கிரீவனும் நட்பு கொண்டனர். இருவரும் சகோதரர்கள் போல துணைவர்களாக பரஸ்பரம் உதவி செய்து கொள்ள உடன்பாடு செய்து கொண்டனர்.