பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 226 இந்த வெற்பின் வந்திவன் இருந்தனன் முந்தை உற்றதோர் சாபம் உண்மையால்” =" "உருமை என்றிவர்க்கு உரிய தார மாம் அரு மருந்தையும் அவன் விரும்பினான் இருமையும் துறந்து இவண் இருந்தனன் கருமம் இங்கிதே! கடவுள்” என்றனன். என்று கம்பன் தனது கவிதையில் கூறுகிறான். அப்போது இராமன், தனது தம்பிக்கு தனது அரசுரிமைப் பாரத்தைக் கொடுத்த அந்த உத்தமராமன் ஒருவன் தன் இளையோனை அடித்து விரட்டியது மட்டுமல்லாமல் அவனது தாரத்தையும் எடுத்துக் கொண்டான் என்னும் சொல்லைக் கேட்டுக் கோபம் கொண்டு “தலைமையோடு நின்தாரமும் உனக்கின்று தருவேன் புலமையோய், அவன் உறைவிடம் காட்டு” என்று இராமன் சுக்கிரீவனுக்கு உறுதி கொடுத்தான். பின்னர் மாருதி இராமனிடம், “கொடும் திறல் வாலியைக் கொன்று கோமகன் கடும் கதிரோன் மகன் ஆக்கிக் கைவளர் நெடும்படை கூட்டினால் அன்றி நேடரிது அடும்படை அரக்கர்தம் இருக்கை ஆணையாய்” வலிமை மிக்க வாலியைக் கொன்று, ரான்மகன் சுக்கிரீவனை அரசனாக்கி, வானர ெ படையைக் கூட்டி, அரக்கர்களின் இருக்கையைத் தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறான்.இங்கு அனுமன் இராமபிரானுடைய அவதாரக் கடமையை எடுத்துக் கூறுவதைப் போலக் கம்பனுடைய கவிதையின் கருத்து அமைந்திருக்கிறது. இப்போது வாலிபால் செல்லலாம் என்று இராமன் கூற அங்கிருந்து கிட்கிந்தை புறப்பட்டனர். இராமன் சுக்கிரீவனிடத்தில் “நீ வாலியை