பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 230 என்ற முறையில் எப்படி இருவருடைய உணர்வு நிலையும் இருந்தது என்பதைக் கம்பன் மிக நுட்பமாக விளக்குவதைக் காண்போம். வாலி வீழ்ந்த பின்னர், வாலியின் மார்பில் பாய்ந்திருந்த கணை இராமனுடைய கணைதான் என்பதை வாலி கண்டபின் அவனுக்கும் இராமனுக்கும் ஒரு நீண்ட விவாதம், வாக்குவாதம், நடைபெறுகிறது. அந்த உரையாடல் ஒரு அற்புதமான தனி இலக்கியப் பகுதியாகும். தாரை எச்சரித்த போது இராமன் நிச்சயமாகத் தங்கள் சகோதரப் பிரச்னையில் தலையிட மாட்டான் என்று நம்புகிறான். பின்னர் தனது மார்பில் பாய்ந்துள்ள அம்பை இழுத்துப் பார்த்த போது அது இராமனுடைய அம்புதான் என்று தெரிந்த போது, 'இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள் வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நன்னூல் சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை நல்லறம் துறந்தது, என்னா, நகைவர நாண் உட் கொண்டான்” இவ்வாறு இல்லறத்தைத் துறந்த இராமன் வில்லறத்தைத் துறந்து விட்டான். அதனால் வேத நன்னூல்களின் தர்ம நீதிகளை இது வரைத் தவர விடாமல் காத்திருந்த சூரிய குலத்தின் மரபினர் இப்போது அதன் தொன்மையான நல்லறத்தின் மாட்சியைத் துறந்து விட்டது என வாலி நகைத்தான். நாணமடைந்தான், என்று கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். இன்னும் வாலி வெட்கத்தால் தலை குனிந்தான். வெடிபடச் சிரித்தான்.இது அறம்தானா என்று மனம் வெள்கினான். இன்னும் இராமன் நீதி தவறி விட்டான் என்றும் அவனுடைய செய்கை தாழ்ந்தவர்களின் குணம் என்றும் முறை தவறி விட்டான் என்றும் மறை திறம்பாத வாய்மையைக் கைவிட்டான் என்றெல்லாம் வாலி பேசியதைக் கம்பன் விரிவாகவே குறிப்பிடுகிறார்.