பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= --- - - -—t - s ר ר கமபன_ஒரு_சமுதாயப_பாவை அ. சினிவாசன் 23 | இராமன் அருகில் வருவதைக் கண்டான் வாலி. யாது நினைத்தாய்? என்ன செய்தாய்? என்று அவனிடம் வாலி கேட்டான். தொடர்ந்து இராமன் மீது பல கேள்விக் கணைகளைத் தொடுத்தான். வாய்மையும் மரபும் காத்த தசரத மன்னன் மைந்தனா நீ, பரதனுக்கு முன் பிறந்தவனா நீ, பிறரைத் தீமை செய்யாமல் தடுக்கும் நீ மட்டும் தீமை செய்யலாமா? தாய்மையும், நட்பும், தருமமும், தழுவி நின்றாயா? குலம், கல்வி, கொற்றம், நலம், நாயகம் எல்லாம் உன்னுடையதுதானே. அதன் திண்மை கலங்கும்படி செய்யலாமா? அவையெல்லாம் நீ அறிந்திருந்தும் அவைகளை நீ மறந்து விடலாமா? அரச தர்மம் உன் குலத்தாருக்கு உரியதல்லவா? உனது தேவியைப் பிரிந்த பின்னர் உனக்குத் திகைப்பு ஏற்பட்டு விட்டதா? அரக்கர் செய்த அழிம்புக்காக குரங்கின் அரசைக் கொல்வதற்கு எந்த மனு நெறியில் கூறியிருக்கிறது? இரக்கத்தைக் கை விட்டாயா? என்பால் என்ன பிழை கண்டாய்? நீயே இத்தகைய பெரிய குற்றத்தைச் செய்தால் உலகம் தாங்குமா? இந்தப் பேருலகில் நாடெல்லாம் அலைந்து திரியும் குரங்குக் கூட்டத்திற்கு மட்டும் கலிகாலம் ஏற்பட்டு விட்டதா? மெலிந்தோர் மட்டும்தான் ஒழுக்கத்துடனும் விழுப்பத்துடனும் இருக்க வேண்டுமா? வலியவர்கள் தவறு செய்தால் அதைக் கேட்பதற்கு ஆள் இல்லையா? உன் தம்பிக்கு ஆட்சியைக் கொடுத்து ஒரு நல்ல காரியம் செய்தாய். என் தம்பிக்கு இந்த அரசைக் கொடுத்து கரும காளியம் (கருமாதி) செய்தாய் போலும், இதைவிட அருஞ்செயல் வேறு என்ன இருக்கிறது.? நீ இப்போது செய்துள்ளது ஆண்மையான வீரமான செயல் தானா? தொன்மையான பல வேதங்களையும், சாத்திரங்களையுமெல்லாம் கற்றவன் நீ. என்னை நீ இவ்வாறு செய்தது சரிதான் என்றால் இலங்கை வேந்தன் செய்தது எப்படித் தவறு என்று கூற முடியும்.? இருவர் போரிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த இருவரும் உனக்கு வேண்டிவர்களாக இருக்கும்போது அதில் ஒருவன் மீது மட்டும் ஒளிந்திருந்து அம்பெய்வது எந்த தர்மத்தில் பட்டது? நீ செய்தது வீரமல்ல, முறையல்ல, உண்மையின் பகுதியுமல்ல. நீ ஆளும் இந்த மண்ணுக்கு நான் ஒரு பாரமுமல்ல. நான் உனது பகைவனுமல்ல. பண்பு ஒழிந்து நெஞ்சில் ஈரமின்றி இதை நீ ஏன் செய்தாய்? நல்லது கெட்டது பார்த்து எல்லோரையும் சமமாகப் பாவித்து நியாயம் செய்வது தானே அறம் காக்கும் பெருமை? பிழை ஏற்படாமல் காப்பதை விட்டுவிட்டு ஒரு தலைப்பட்சமாக நின்று செயல்