பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - கமபன-ஒரு சமுதாயப பாவை- அ. சீனிவாசன் 233 கோபங்கொண்டு, அத்துடன் சந்தேகமும் ஆத்திரமும் அடைந்து உன் தம்பியைக் கொல்ல முனைந்தாய். அவன் மீது குற்ற -மில்லையென்பது தெரிந்தும் நீ இரக்கம் கொள்ளவில்லை. எனக்கு அல்லல் செய்யாதே, உனக்கு அபயம் எனது சிறு பிழையை மன்னித்து விடு ' என்று எவ்வளவோ கூறியும் நீ அவனை ஆதரிக்காமல் போனாய். அவனுக்கு இரக்கம் காட்டாமல் பொங்கி எழுந்தாய். அவனும் வலிமையுடையவனாக இருந்தும் உனக்குத் தோற்றேன் என்று உன்னை வணங்கினான். நீ அண்ணன் என்ற முறையில் உனக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தான். அப்படியிருந்தும் அவனை எமலோகம் சேர்ப்பேன் என்று அடித்தாய். நான்கு திசைகளுக்கும் அப்பால் துரத்தினாய். உண்மை தெரிந்தும் அவனுக்கு நீ அருள் காட்டவில்லை. உனது தம்பி என்று நீ கருதவில்லை. அவனுக்குப் பரிவு காட்டவில்லை. வேறு வழியில்லாமல் உனக்குள்ள சாபத்தினால் நீ போக முடியாத பொன் மலைக்கு ஒடிச் சென்று அங்கு ஒளிந்து கொண்டான். அத்துடன் அவனுடைய தாரத்தையும், அபகரித்துக் கொண்டாய். மற்றவனுடைய தாரத்தை அபகரிப்பவனுக்கு ஈரமேது? நற்பிறப்பு ஏது? வீரம் ஏது? கல்வியின் மெய்ந்நெறி ஏது? தெளிவுடையோர்க் கெல்லாம் தாங்கள் வல்லவர்களென்று மனம் கொண்டு வீரத்தை அழித்தல், அறத்தை அழித்தல், மங்கையர்களின் கற்பை அழித்தல் எளியோர் மீது சினம் கொள்ளுதல் ஆகியவைகளே வாடிக்கையாகும். தருமம் இதுதான் என்பதை நீ பாரபட்சம் இல்லாமல் எண்ணிப் பார்க்கவில்லை. அப்படி எண்ணியிருந்தால் உன் தம்பியின் ஆருயிர்த் தேவியை அபகரித்திருப்பாயா? ஆதலால் அந்த சுக்கிரீவன் எனது அன்புக்குரியவனானதாலும், ஆதரவற்றவர்களையும் மெலிந்தோரையும் தீமையிலிருந்து நீக்குவது எனது எண்ணமாகுமென்று இராமன் பதிலளித்தான். வாலியின் கேள்விகளுக்கு இராமன் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆயினும் வாலியின் சகோதரக் கடமையை எடுத்துக் காட்டி அவனுடைய குறைகளையும் தவறுகளையும் எடுத்துக் கூறிf கடைசியில் சுக்கிரீவன் எனது அன்புக்குரியவன் எனவே அவனுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளேன் என்று கருத்து நிறைந்த வார்த்தைகளை இராமன் கூறினான். மீண்டும் வாலி தன்னுடைய நிலையை நியாயப்படுத்தும் வகையில் பதில் பேசுகிறான். அவன் தனது தம்பியை அடித்து