பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும 234 விரட்டியதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. அதில் இராமன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கூறவில்லை. தாரத்தை எடுத்துக் கொண்டது பற்றி மட்டும் பதில் கூறுகிறான். “உங்கள் குலத்திலுள்ளது போல் கற்பு நிலை பற்றி எங்களுக்கு பிரமன் விதி வகுக்கவில்லை. எங்களுக்குத் திருமணநெறி முறைகளில்லை. அவனவன் அடைந்ததை அடைந்து வாழும் படி எங்களுக்கு மேலவன் விதித்துள்ளான்” என்றும், “எங்களுக்கு மறைநெறி முறையிலான மண முறையுமில்லை. குலத்தின் வழியிலான குணமும் இல்லை. மனம் போனபடி வாழும் வாழ்க்கையல்லாமல் ஆண்டவன் எங்களுக்கு வேறு வழி விதிக்கவில்லை. என்று தங்களுடைய குல ஒழுக்கத்தைப் பற்றி வாலி கூறுகிறான். வாலி கூறிய இந்த ஒழுக்க முறை பற்றி இராமன் அறியாதவனல்ல. “பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ?”என்று சுக் கிரீவனைக் குறித்தே இராமன், இலக்குவனிடம் கூறியதை அறிவோம். பால் ஒழுக்கம் என்பது காலத்தாலும், சமுதாய வளர்சியாலும் நாகரிக வளர்ச்சியாலும் மாறிக் கொண்டும், வளர்ச்சி பெற்று நெறிப் படுத்தப் பட்டும் வந்திருக்கிறது. குடும்ப அமைப்பு, திருமண முறை, ஆண் பெண் థ్ర வாழ்க்கையின் நெறிமுறை, ஆகியவைகளில் பழயன கழிந்து(புதியன தோன்றி நிலை பெற்றும் நீங்கியும் வந்துள்ளன. பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல், குடும்ப வாழ்க்கையிலும், இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் நெறி முறைகளும் உருவாக்கப்பட்டு நிலை பெற்று வந்திருக்கின்றன. இப்படிதான் வாழ வேண்டுமென்பதில்லை. எப்படியும் வாழலாம் என்று இப்போதும் சிலர் கூறிவருகிறார்கள். தசரதனுடைய நிலை இராமனுக்கில்லை. பால் உறவில் ஆண்கள் தவறிழைக்காமல் பெண்கள் தவறிழைப்பது சாத்தியமில்லை. அதனால்தான் கற்பு நிலை என்பது இரு பாலருக்கும் பொதுவாக வைப்போம் என்று இக்காலத்திய பாரதி கூறினான். இராமன் மேலும் பேசுகிறான். மிகச் சிறந்த) சமுதாய நெறிமுறைகளையும் ஒழுக்க முறைகளையும் பற்றிப் ப்ேசுகிறான். கலக்கமில்லாத தெளிவான நன்னெறி கண்டால் விலங்குத் தன்மையும், நீங்கும். அதுவே வீரர்களுக்கு அழகாகும். ஐம்பொறிகளையும் நாம் ஒரு முகப் படுத்தி நெறிப் படுத்தி அறிவின்