பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. கம்பநாடரும் 'இராமாவதாரக் காவியமும்

சாய்ந்த எழுத்துக்கள்இனக்குழுவைச் சேர்ந்த தலைவன் ஒருவன் மற்றொரு இனக்குழுவைச் சேர்ந்த ஒருவனுடைய மனைவியை வன் முறையாகத் தூக்கிக் கொண்டு போய் விட்டான். அப்பெண்ணை அவளைச் சார்ந்த இனக் குழுவினர் வேறு சில நட்புறவு கொண்ட இனக் குழுக்களையும் சேர்த்துக் கொண்டுச் சண்டைபோட்டு மீட்டிக் கொண்டு வந்ததாக நாட்டுப் பாடல்களில் வந்த கதைப் போக்கு பின்னர் படிப்படியாகப் பெரிய கதையாக வளர்ந்தது என்று ஆய்வு செய்து கூறியுள்ளார்.

மனித சமுதாயம் இனக் குழுக்களாகப் பிரிந்து பழங்குடி மக்களாக வாழ்ந்து வந்த காலத்தில் இப்படிப் பட்ட பல நிகழ்ச்சிகளும் பல பகுதிகளிலும் நடந்திருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் இனக் குழு மக்களிடத்தில் தன்னுணர்ச்சிகளைத் தூண்டும் இனக் கவுரவப் பிரச்சனையாக எழுந்த பல சண்டைகளும் நடந்திருக்கின்றன. அத்தகைய மூலக்கதை நிகழ்ச்சிகளுடன் கற்பனை இணைப்புகளும் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற பண்பாடுகளும் நீதி நெறி ஒழுக்க நெறி முறைகளும் நாகரிக வளர்ச்சியின் இதர அங்கங்களும் இணையும் போது அது ஒரு பெரிய இலக்கியமாக மலர்ந்து விரிவடைந்து விடுவதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பழங்குடி மக்களிடத்தில் அதுவும் மனிதக் குழுக்களின் தோற்றத்தின் தொடக்க காலங்களிலும், அடுத்த காலங்களிலும் இனக்குழு அமைப்புகளாக இனக்குடும்பங்கள், கூட்டங்களாக மனிதன் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட பல சண்டைகளும், மோதல்களும், சேர்மானங்களும் பல கதைகளாக உருவாகி அவை பின்னர் பெரிய இலக்கியங்களாகவும் வளர்ந்துள்ளன என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த வகையில் இராமாயணப் போர் இரு இனக் குழுக்களுக்கிடையில் நடந்த போர் என்றும் மகாபாரதப் போர் ஒரே இனக் குழுவிற்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக எழுந்த போர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள். எனினும் மனித சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியில் மனித வாழ்க்கைக்குத் தேவையான உற்பத்திக் கருவிகளும், உற்பத்தி சக்திகளும், உறவுகளும், வளர்ச்சி பெறும் போது மனிதனின் எண்ணங்கள், கருத்துக்கள், மனோபாவங்கள், பழக்கவழக்கங்கள், நடை உடை