பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை-அ.-சீனிவாசன் 237 நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமே தீயனபொருத்தி என்றான் சிறியன சிந்தியாதான்” "இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றாக் குரங் கெனக் கருதி நாயேன் கூறிய மனத்துக் கொள்ளேல் அரந்தை வெம்பிறவி நோக்கும் அருமருந்து அனைய ஐயா ! வரந்தரு வள்ளல் ! ஒன்றுகேள் என மறித்தும் சொல்வான்,” “ஏவு கூர்வாளியால் எய்து, நாயடிய னேன் ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்தருளினாய் மூவர்நீ; முதல்வன் நீ; முற்றும் நீ; மற்றும் நீ; பாவம் நீ; தருமம் நீ; பகையும் நீ; உறவும் நீ ” என்றெல்லாம் வாலி கூறுவதைக் கம்பன் மிக அருமையாக எடுத்துக் கூறுகிறார். இங்கு வாலியின் மன நிலையில் ஒரு அடிப்படையான மாற்றம் ஏற்படுவதைக் காண்கிறோம். முதலில் காரணமில்லாமல் சுய கவுரவத்தில் சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் வெறும் பட்டறிவு நிலையிலிருந்தே அவன் தனது சகோதரனை விரட்டி விரட்டித் துரத்தினான். தன்னிடம் பலம், வரம், செல்வாக்கு, வலிமை என எல்லாம் இருக்கிறது என்னும் காரணத்தினாலே எளியோரை தன்னைக் காட்டிலும் அச்செல்வங்களில் குறைந்தோரை இழிவாகக் கருதித் துரத்துவது நீதியல்ல, நியாயமுமல்ல. இதில் சுக்கிரீவனும் எந்த விதத்திலும் தாழ்ந்தவனல்ல, குறைந்தவனல்ல, வலுவில்லாதவனல்ல. வைகளிலெல்லாம் வாலிக்கு அடுத்த நிலையிலுள்ளவன், சகோரப் பற்றும் பாசமும் அன்பும், அண்ணன் மீது அளவற்ற உயர் 'மதிப்பும் கொண்டவன். அத்துடன் அண்ணனுடைய அளவில்லாத பலத்தையும் வரத்தையும் கருதி அவன் பால் அச்சமும் கொண்டவன்.