பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 238 | க. க. . سي--- H is --- சந்தர்ப்ப சூழ்) நிலையினாலோ தற்செயலான நிகழ்வுப் போக்கினாலோ அல்லது விதி வலியாலோ, முழு முதல் மூலப் பொருளான இராமபிரானே சுக்கிரீவனைத் தேடி வந்து அவனுடன் நட்பு கொள்கிறார். நமது பக்தியினாலும் பொறுமையினாலும் அடக்கத்தினாலும் பூர்வஜன்ம பலனாலும், காலம் கருதிக் காத்திருக்கும் போது, ஆண்டவனே, முழு முதல் மூலப் பொருளான றுநீராமன் நாராயண மூர்த்தியே நம்மைத் தேடி வந்து நமக்கு அருள் புரிவார் என்பது வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படைக் கருத்தாகும். அந்த வகையில் சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் வந்தான். இராமபிரானுடைய உதவியினால், ஆதரவால் ஆலோசனையால் துணையால் அருளால், சுக்கிரீவன் நலம் பெற்று உயர் நிலை பெறுகிறான். வாலி தன் பலத்தை மட்டும் நம்பி நின்று தனிமைப் பட்டுச் சாய்கிறான். அவனுடைய மார்பில் இராமனுடைய கணை பாய்ந்த போது அது இராமனுடைய கணை தான் என்று அறிந்த போது முதலில் இராமனை ஏசுகிறான். நிந்தனை செய்கிறான். கலக்கத்துடன் இருக்கிறான். இராமனைப் பல கேள்விகளும் கேட்கிறான். இராமனும் பொறுமையாக இருந்து அவனுடைய கேள்விகளையும் நிந்தனைகளையும் பொருட் படுத்தாமல் ஒதுக்கி விட்டு அவனுடைய தவறுகளையும், தம்பிக்குச் செய்த தீங்குகளையும் சகோதர உறவைக் கெடுத்த செயல்களையும் அறவழி மீறல்களையும் சுட்டிக் காட்டுகிறான். இராமனுடைய இந்த விளக்கங்களுக்கும் எதிர்க் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற முடியாமல் வாலி, கடைசியில் மறைந்திருந்து ஏன் கணை தொடுத்தாய் என்னும் கேள்வியை மட்டும் கேட்கிறான். அதற்கு இராமன் பதில் கூறவில்லை. இலக்குவன் பதில் கூறுகிறான்.'இராமன் சுக்கிரீவனுக்கு அபயம் கொடுத்து விட்டான். வாக்குறுதியும் கொடுத்துள்ளான், அவனைக் காப்பாற்ற வாக்குறுதியை நிறைவேற்ற உன் மீது கணை தொடுத்தான்” என்று இலக்குவன் பதில் கூறுகிறான். அத்துடன் நேருக்கு நேராக இராமன் உன் எதிரில் வந்து விட்டால், நீயும் அன்பினை உயிருக்காகி அடைக்கலம் என்று கூறி விட்டால், உன் தம்பிக்குக் கொடுத்த வாக்குறுதி என்னாவது எனவே உன்னை மறைந்திருந்து கொல்ல வேண்டியதாயிற்று என்றும் இலக்குவன் கூறுகிறான். “முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறையிலோயைத்