பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு_சமுதாயப்-பார்வை-அ. சினிவாசன் 239 தென்புலத்து உய்ப்பன் என்று (ിലിങ്ങ് செருவில், நீயும் அன்பினை உயிருக்காகி (அடைக்கலம் யானும் என்றி என்பது கருதி அண்ணல் மறைந்து (நின்று எய்தது என்றான்” என்பது கம்பன் கவிதையாகும். இங்கு கம்பன் மிகவும் நுட்பமாகக் கதைப் போக்கைக் கொண்டு செல்கிறார் என்பதையெல்லாம் பார்க்கிறோம். வாலி சிந்திக்கிறான். அவனைக் கம்பன் மிகவும் உயர்த்தி, மிகவும் மேலான நிலைக்குக் கொண்டு சென்று “சிறியன சிந்தியாதான்” என்னும் சிறந்த பட்டத்தைச் சூட்டுகிறான். சிறிய அற்பமான சிந்தனைகளிலிருந்து வாலி மீண்டு விட்டான். உயர்வான சிந்தனைகள் அவனிடம் வந்து விட்டன. அறிவுத் தெளிவு ஏற்பட்டு விட்டது. “நான் இதுவரை கூறிய சிறிய வார்த்தைகளை நிந்தனைகளை மனதில் கொள்ள வேண்டாம் மன்னித்து விடுங்கள்” என்று கூறி முக்தி நிலைக்கு வந்து விட்டான். உடலாலும், உயிராலும், உள்ளத்தாலும், உணர்வாலும், (அறிவாலும்) சிந்தனையாலும் வாலி முழுமையான விடுதலை பெற்று விட்டான். 'மூவரும் முதல்வனும் நீதான், முற்றும் மற்றும் அனைத்தும் நீதான், பாவமும், தருமமும் நீதான், பகையும் உறவும் நீதான் என்று முழு முதற் கடவுளான இராமனைக் குறிப்பிட்டு, ஒரு முற்றிய முழுமையான அறிவு முதிர்ச்சி நிலைக்கு, எந்தவிதமான வேற்றுமையும் காணாத ஜீவன் முக்தி நிலைக்கு வாலி வந்து விடுகிறான். “தருமமே உருவான உன்னைக் கண்டு கொண்டேன். என் பழவினைகளெல்லாம் பண்டோடு போகட்டும் உன்னுடைய அரிய செய்கையால் என் தம்பி, தான் வெற்றரசு அடைந்து எனக்கு வீட்டரசு கொடுத்து விட்டான்” என்று வாலி பேசுகிறான். நாட்டொருகருமமும் காட்டொருகருமமும் என்று பேசிய வாலி இப்போது வெற்றரசு, வீட்டரசு என்று பேசும் அளவில் மாற்றமும் ஏற்றமும் கொண்டு விட்டான்.