பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 244 இத்தகைய சிறப்புகள் மிக்க இராவணன் இலங்கையின் வேந்தன். அவ்விலங்கையோ செல்வச் செழிப்பு மிக்கது. படை பலமும் கோட்டை பலமும் கொண்டது. கோடிக்கணக்கான மாவீரர்கள். நிறைந்த நாடு. அழகிய சோலைகளையும் மாளிகைகளையும் கொண்ட நாடு, அத்தகையப் பெருநாட்டின் தலைவன் மாவீரன் இராவணன் அவன் இராவனேஸ்வரன் என்று பாராட்டப்படுபவன். இராவணனுடைய தம்பியர் கும்பகருணனும் வீடணனுமாவர். கும்பகருணன் அண்ணனுக்கடுத்தப் படியான வல்லமையும் வீரமும் மிக்கவன். பெருந்தீனி தின்பவன். ஆண்டில் பாதி உறங்கிக் கிடப்பவன். நீதி அறிந்தவன் நியாயம் உணர்ந்தவன், அண்ணன் மீது அன்பும் பாசமும் பக்தியும் பணிவும் கொண்டவன். தம்பி வீடணன் மீது அன்பும் பாசமும் பரிவும் அரவணைப்பும் கொண்டவன். வீடணன் விரம் மிக்கவன். நீதி நிறைந்தவன், அறத்தின் பால் உறுதியாக நிற்பவன், திருமால் பக்தன், பிரகலாதனுக்கு ஈடானவன், அறம் தவறிய அண்ணனை விடுத்து இராமன் பக்கம் சென்றவன். இராமனுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவன், வீடணாழ்வார் என்று வைணவர்களால் சிறப்பாகப் போற்றப் படுபவன், அண்ணனைக் கை விட்டவன் என்று சிலருடைய துாற்றலுக்கும் ஆளானவன். அண்ணன் பால் மிகுந்த பாசமும் நல்லெண்ணமும் மரியாதையும் கொண்டவன், அண்ணன் தவறிழைக்கிறான் என்று கவலை கொண்டு வருந்தியவன், துய்மையானவன், அரக்கர் குணம் சிறிதும் இல்லாதவன், கொள்கையில் உறுதியான பிடிப்பு கொண்டவன். இவ்வாறான முரண்பட்ட குணச் சிறப்புகளைக் கொண்ட மூவர் இலங்கைச் சகோதரர்களாவர். இலங்கையே அவர்களுடைய களம். சுந்தரகாண்டத்தில் அனுமன் இலங்கையில் குந்து சீதையிருக்கும் இடத்தைத் தேடுகிறான். இரவில் நில்வெளிச்சத்தில் இலங்கையின் மாளிகைகள் பலவற்றையும் க்ாண்கிறான். கும்ப கருணன், வீடணன், இராவணன் ஆகியோருடைய மாளிகைகளில் அவரவர்கள் துங்கிக் கொண்டிருந்ததை அனுமன் கண்ட விவரங்களைப் பற்றிக் கம்பன் மிக அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார்.