பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 246 அனுமன் அதை உற்று நின்று, அவன் உணர்)வைத்தன் உணர்வினால் உணர்ந்தான், குற்றமில்லதோர் குணத்தினன் இவன் எனக் கொண்டான் என்று கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீதையைக் கண்டு பேசிவிட்டு, அவள் கொடுத்த அடையாள அணிகலனைப் பெற்றுக் கொண்டு திரும்பிய அனுமன் தான் இலங்கை சென்று வந்ததன் அடையாளமாக அறிய செயல் ஒன்றைச் செய்து விட்டுப் போக வேண்டுமென்று கருதி நகரிலிருந்த பல மரங்களை ஒடித்தும் சோலைகளைத் சிதைத்தும் மாளிகைகளைச் சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தான். அவனை எதிர்த்தப் பல அரக்கர்களை வீழ்த்தினான். இராவணனுடைய மதன் அட்சயகுமாரனைக் கொன்றான். கடைசியில் மேகநாதன் பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுண்டான். அப் ராக்கதர் பலரும் அவனைக் கட்டி இழுத்துக் கொண்டு சபைக்குக் கொண்டு போய் இராவணன் முன்பு நிறுத்தினர். இந்தக் குரங்கு யார் என்று இராவணன் கேட்ட போது அனுமன் “வில்லி தன் துாதன் யான்'என்று பதில் கூறினான். அனுமனுக்கும் இராவணக்குமிடையில் நடந்த நீண்ட வாக்கு வாதத்திற்குப் பின்னர் இராவணன் கடுங்கோபம் கொண்டு இவனைக் கொன்று விடுங்கள் என்று தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்ட போது வீடணன் தலையிட்டு “நில்லுங்கள்” என்று தடுத்து அண்ணனை வணங்கி மூண்ட கோபம் முறையது” என்று மெய்யுரை விளம்பினான். "அந்தணன், உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்து தக்கோய் இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ! இயம்பு துது வந்தெனென் என்ற பின்பும் கொல்லியோ மறைகள் வல்லோய்” என்று இராவணனுடைய ஆட்சியின் பெருமைகளைக் கூறி அறத்தை உணர்த்தி, துதரைக் கொல்வது கூடாது என்று சொல்லித் தடுத்தான். வீடணன் கூறியதை ஒத்துக் கொண்ட இராவணன் “அனுமன் -