பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு_சமுதாயப் பார்வை- அ. சீனிவாசன் 247 வாலில் தீயிட்டு ஊரைச் சுற்றி இழுத்துக் கொண்டு போய் அடித்துத் துரத்துங்கள்” என்று கூறி அவனை விரட்டிவிட்டான். இலங்கை எரிந்தது. இராவணன் தனது சபையைக் கூட்டி மந்திராலோசனை நடத்துகிறான். இந்த சபைக்கு அவன் தன்னுடைய மிக முக்கியமான நெருக்கமான அமைச்சர்கள், சகோதரர்கள், உறவினர்கள், குமாரர்கள் முதலியோர்களை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தினான். இந்தச் சபையில் இராவணன், கும்பகருணன், வீடணன் ஆகிய மூன்று சகோதரர்களையும் நாம் சந்திக்கிறோம். அந்த மூவருக்கிடையில் கலந்துரையாடலும் விவாதமும் கருத்துப் பரிமாற்றமும் உடன்பட்டும் முரண்பட்டும் நடைபெறுகிறது. சகோதரபாசம், அன்பு, மரியாதை, தன்மானம், மதிப்பு, அச்சம், அறநெறி அரச நீதி குல தர்மம், ஒழுக்கநெறி, முதலிய அனைத்தும் பேசப் படுகிறது. “சுட்டது குரங்கு எரி சூறை யாடிடக் கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும் பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும் இட்ட இவ் அரியணை இருந்தது என் உடல்” என்று இராவணன் கூறுகிறான். பலரும் தங்கள் ஆலோசனைகளைக் கூறிய பின்னர், கும்பகருணன் பேசத் தொடங்கினான். கும்பகருணனுடைய பேச்சில் ஒரு பக்கம் நீதியும், தருமமும் மறுபக்கம் குலப்பெருமையும் வெளிப் படுகிறது. “வெம்பு இகல் அரக்கரை விலக்கி வினை தேரா நம்பியர் இருக்க என நாயகனை முன்னா எம்பி என கிற்கில் உரை செயவல் இதம் என்னா கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்” என்று கம்பன் குறிப்பிடுகிறார். கும்பகருணன் பேசுகிறான்.