பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 248 “நீ அயன் முதற்குலம் இதற்கு ஒருவன் நின்றாய் ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் தீயினை நயப்புறுதல் செய்வினை தெரிந்தாய் ஏயின உறத்தகைய இத்துணையவே யோ?” அயன் குலத்திற்கு நீ ஒருவன் எங்களுக்கெல்லாம் தலைவனாக இருக்கின்றாய். ஆயிரம் வேதங்களின் பொருளை உணர்ந்து அறிவு கொண்டிருக்கிறாய், நெருப்பை விரும்புவது போன்ற ஒரு காரியத்தைச் செய்யக் கருதினாய், ஊழ்வினையால் ஏவப்பட்டு வருவதற்கு உரியன இவ்வளவு தானா? இன்னமும் இருக்கிறது. “ஒவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் கோவியல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ? பாவியர் உறும் பழி, இதின் பழியும் உண்டோ?” "நன்னகர் அழிந்தது என நாணினை நயத்தால் உன்னுயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல் ஒள் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் பொன்னடி, தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம்.” ஒவியங்களால் அமைந்த நமது அழகிய நகரம் தீயினால் அழிந்து சேதப் பட்டு விட்டது. அதனால் நமது அரசியல் அழிந்து நமது ஆட்சிக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறாய். அதே சமயம் வேறு ஒரு குலத்தைச் சேர்ந்தவனுடைய மனைவியைச் சிறை வைத்துள்ள செயல் நல்லதா? இது பாவத்தை அடையக் கூடியவர் பழியாகும். இதைக்காட்டிலும் மோசமான பழி வேறில்லை. நமது அழகு மிக்க அருமையான நகரம் அழிந்து விட்டது என்று வெட்கப்படுகிறாய். உன்னை விரும்பி உன்னுடன் வந்து உன்னைச் சேர விரும்பும் எத்தனையோ அழகிய பெண்கள் இருக்கும்போது வேறு ஒருவனுடைய மனைவியை விரும்பி அவளைப் போய் அடி தொழுது கொண்டிருக்கிறாய். அவளும்