பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 250 நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்மால் உரம் படுவதே இதனின் மேல் உறுதியுண்டோ?” நல்லவர் செயலை நீ செய்யவில்லை. குலச்சிறுமை செய்து விட்டாய், இனி என்ன செய்வது, அந்தப் பெண்ணை இப்போது விட்டு விடுவதும் நமக்கு இகழ்ச்சியேயாகும். அதற்கு பதிலாகப் போரில் அவர்கள் நம்மை வென்றாலும் பழியில்லை. அடர்த்தியான தாண்டக வனத்தில் இராமன் ஒருவனேயிருந்து கரன் படையை அழித்து விட்டான். அப்போதே அவனை ஒழித்திருக்க வேண்டும். அந்த இராமனுடைய செயல் இன்னும் முடிந்து போகவில்லை. இனி நமது வலிமையைக் காட்ட வேண்டியதுதான். இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. “வென்றிடுவர் மானுடவர் ஏனும் அவர் தம் மேல் நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருங்கித் தின்றிடுதல் செய் கிலம் எனில் செறு நரோடும் ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்றாம்” “ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே ஏறு கடல் ஏறி நரர் வானரரையெல்லாம் வேறு பெயராத வகை வேரொடும் அடங்க நூறுவது வேகருமம் என்பது நுவன்றான்” மானுடவர் வென்றிடுவர் என்றாலும் நாம் காலம் தாழ்த்தாது அவர் மேல் படையெடுத்துச் சென்று அவர்களை நெருக்கித் தின்றிட வேண்டும். இல்லாவிட்டால் அப்பகைவர்களும் தேவர்களும் மற்ற உலகத்தாரும் சேர்ந்து கொள்வார்கள். பெருகி வரும் படைகள் நமது நகருக்குள்ளே புகுவதற்கு முன்பாக கடலையும் தாண்டி அவர்கள் வேறு எங்கும் போய் விடாதபடி அவர்களைக் கொன்று விடுவதே நல்லது என்று கும்பகருணன் கூறுவதை அவனுடைய முரண்பட்ட மன நிலையைக் கம்பன் மிகவும் அருமையாகச் சித்தரித்துக் கூறுகிறார். எதிரிகளைக் குறைவாக மதிப்பிடாமல் நமது பலம் முழுவதையும் ஒரு முகப் படுத்தி எதிரியைத் தாக்கி முறியடித்து விட வேண்டும், அழித்து விட வேண்டும் என்று கூறுகிறான்.