பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை - அ. சீனிவாசன் 251 கும்பகருணனுடைய இந்த வாசகங்களில் சிறந்த உபாயங்கள் நிறைந்த கருத்துக்கள் அமைந்திருப்பதையும் அதே சமயத்தில் விட்டுக் கொடுக்காத குலக் குணமும் இருப்பதையும் காண்கிறோம். “நன்று உரை செய்தாய் குமர! நான் இதை நினைந்தேன் ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம் கொன்று பெயர்வோம் நமர் கொடிப்படையை யெல்லாம் இன்றெழுக என்க! என இராவணன் இசைத்தான்.” நன்றாகக் கூறினாய் குமர! நானும் இதையே நினைத்தேன். இனி வேறு மாதிரியாக எதையும் யோசிப்பதில் பலனில்லை. பகைவரையெல்லாம் கொன்று ஒழிப்போம். நமது படைகளையெல்லாம் இன்றே புறப்படச் செய்யுங்கள் என்று இராவணன் தனது தம்பியைப் பாராட்டிப் பேசினான். இந்திர சித்தன் நானே போய் அவர்களை யெல்லாம் அழித்து விட்டு வருகிறேன் என்று வீரம் பேசினான். வீடணன் அவனைத் தடுத்து அறிவுரை கூறுகிறான். வீடனின் விளக்கவுரை “எந்தை நீ, ! தாயும் நீ,! எம்முன் நீ! தவ வந்தனைத் தெய்வம் நீ! மற்றும் முற்றும் நீ! இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என நொந்தெனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்” “கற்றுறுமாட்சி என் கண் இன்று ஆயினும் உற்றுறு பொருள் தெரிந்து உணர்தல் ஒயினும் சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும் முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்” எனக்குத் தந்தையும், தாயும் முன்னவனும் தெய்வமும் அனைத்தும் நீயே. நீ இப்போது கொண்டுள்ள இந்திரப் பெரும்பதம் இழந்து விடக் கூடாது என்பதனால் இதைக் கூறுகிறேன். நான்