பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zugeot -205 zgozwut Lwowo - 2. stofkowzači 253 விசயம் இல் ! எனச் சொல்லினர் அறிஞரில் மிக்கான்.” இவ்வாறு வீடணன் கூறி முடித்தான். இராவணன் கடும் சீற்றம் கொண்டான். வீடணன் கூறிய வற்றுக்கெல்லாம் இராவணன் பதில் கூறினான். ஏற்கனவே உடைந்திருந்த வில்லை முறித்து, கூனி சூழ்ச்சியால் அரசிழந்து, வனத்திற்கு வந்து என்னால் இல் இழந்து ஒட்டை மரங்களில் அம்பை விடுத்து மறைந்து நின்று வஞ்சகமாய் வாலியைக் கொன்று இன்னுயிர் சுமக்கும் இந்த மானுடர் கூனல் குரங்குடன் சேர்ந்து என்னை என்ன செய்ய முடியும் என்று பேசினான். மீண்டும் வீடணன், “தன்னின் முன்னிய பொருளிலா ஒரு தனித்தலைவன் அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான்” என்று கூறி இராவணனுடைய அடி தொழுது வேண்டிக் கொண்டான். 'இராவணனோ மீண்டும் உனக்கு பயமாக இருந்தால் என்னுடன் சேர்ந்து நீ போருக்கு வர வேண்டாம். இங்கேயே அமைதியாக உண்டு களித்து அமர்ந்திரு” என்று இகழ்ந்து கூறி நகைத்தான். மீண்டும் வீடணன் ஐய, நின் தரம் அலரப் பெரியோர் முன்னை நாள் இவன் முனிந்திடக் கிளையுடன் முடிந்தார் என்று கூறி இரணியன் கதையை எடுத்துச் சொன்னான். அந்தக் கதையைக் கேட்ட இராவணனுக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது. இரணியனுடைய மைந்தனைப் போல நீயும் பகைவனுக்கு நண்பனாக இருக்க விரும்புகிறாயா? எனக் கேட்டு, “நண்ணின மனிதர் பால் நண்பு பூண்டனை எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு உன்னினை, அரசின் மேல் ஆசை ஊன்றினை திண்ணிது உன் செயல். பிறர் செறுநர் வேண்டுமோ?” என்று கூறினான். அன்று வானரம் வந்து சோலையை அழித்த போது அதைக் கொன்று தின்றிடக் கூறிய போது துாதனைக் கொல்லுதல் தகாது